லியோவில் கமல், சூர்யா..? விஜய் போட்ட கண்டிஷன்... LCU கான்செப்ட்டில் இருந்து யூடர்ன் அடித்த லோகேஷ்

சென்னை: விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகிறதா இல்லையா என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், லியோ டைட்டில் ப்ரோமோவும் கடந்தாண்டு ஹிட் அடித்த கமலின் விக்ரம் பட டைட்டில் ப்ரோமோவும் ஒரேமாதிரி இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்தப் படம் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவானால், கமல், சூர்யா, கார்த்தி, ஃபஹத் பாசில் இவர்கள் நடிக்கலாம் என சொல்லப்பட்டது.

 லியோ லோகேஷ் யுனிவர்ஸ்ஸா?

லியோ லோகேஷ் யுனிவர்ஸ்ஸா?

வாரிசு கொடுத்த வெற்றியால் உற்சாகமான விஜய், வெக்கேஷன் போகாமல் உடனடியாக லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என ஹிட் மேல் ஹிட் கொடுத்து வரும் லோகேஷுக்கு, லியோ படத்திற்காக 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம்பிடிக்குமா இல்லையா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 லியோவில் கமல், சூர்யா, கார்த்தி..?

லியோவில் கமல், சூர்யா, கார்த்தி..?

கார்த்தியின் கைதியில் இருந்து சில சீக்வெல்ஸை இணைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ். அதனால், விக்ரம் க்ளைமேக்ஸில் கார்த்தியின் வாய்ஸ் ஓவரை மட்டும் பயன்படுத்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதேபோல், விக்ரம் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்த சூர்யா, ரசிகர்களின் ஒட்டுமொத்த அப்ளாஸ்களையும் அள்ளிச் சென்றார். அதனால் லியோ படத்திலும் இதுமாதிரியான மேஜிக்ஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கமல், சூர்யா, கார்த்தி ஆகியோர் விஜய்யுடன் நடிக்கலாம் என சொல்லப்பட்டது.

 விஜய் போட்ட கண்டீஷன்?

விஜய் போட்ட கண்டீஷன்?

லியோ ஷூட்டிங் தொடங்கும் முன்னரே இந்தப் படத்தில் தானும் நடிக்கலாம் என ஃபஹத் பாசில் பொடி வைத்து பேசியிருந்தார். ஆனால், லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸாக இருந்தாலும், இந்தப் படத்தில் கமல், சூர்யா, கார்த்தி, ஃபஹத் பசில் நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் மற்ற நடிகர்களுக்கும் ஸ்க்ரீனில் நல்ல ஸ்பேஸ் கொடுத்தார் கமல். ஆனால், லியோவில் அது நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

 யூடர்ன் அடித்த லோகேஷ் கனகராஜ்

யூடர்ன் அடித்த லோகேஷ் கனகராஜ்

விஜய் எப்போதுமே சிங்கிள் ஹீரோயிசம் கொண்ட கதைகளை தான் அதிகம் விரும்புவார். அதனால் லியோவில் கேமியோ ரோல்கள் இருந்தாலும் அதில் வெயிட்டேஜ் இருக்கக் கூடாது என லோகேஷிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால், லோகேஷும் இந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டாராம். முன்னதாக கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும், அதற்கு விஜய் இந்த ஆஃபரை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் லோகேஷின் லியோ படத்தில் கமல், சூர்யா, கார்த்தி நடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

 விரைவில் அடுத்த ஷெட்யூல்

விரைவில் அடுத்த ஷெட்யூல்

இதனிடையே, காஷ்மீரில் நடைபெறும் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், டான்ஸர் வசந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து லெஜண்ட் அண்ணாச்சியும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்த லொக்கேஷனுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் லோகேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X