சுத்தமாக இருக்க வேண்டும்.. உண்மையை பேச வேண்டும்.. விஜய்யை விமர்சித்த நடிகர்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் தளபதி 69 படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்பதும்; அதனை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். முழுமூச்சாக அரசியலில் இறங்கியிருக்கும் அவர் இன்றுகூட பரந்தூருக்கு சென்றிருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்திருந்த GOAT திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, ஜெயராம், யோகி பாபு, மீனாட்சி சௌத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருந்தாலும் எந்தவித பயனும் இல்லை. வசூல் ரீதியாக படம் லாபத்தை சந்தித்ததாக கூறப்பட்டாலும்; விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவு கொண்டாடப்படவில்லை. இதனால் விஜய்யும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்தான்.

vijay ajith meesai rajendran

தளபதி 69: இந்தப் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதுதான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும்; கடைசி படம் தோல்வி படம் என்கிற பெயரை மட்டும் பெற்றுவிடவே கூடாது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார் அவர். அதனால்தான் அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறார். தற்போது அரசியலிலும் மிக பிஸியாக இருக்கிறார் அவர். அந்தவகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் 13 கிராம மக்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் சரவெடியாக பேசினார். இந்தச் சூழலில் விஜய் குறித்து பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் காட்டமாக சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

vijay ajith meesai rajendran

மீசை ராஜேந்திரன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜய்யின் வாரிசு படத்தை கோவையில் 11 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். ஆனால் அந்தப் படமோ அந்தத் தொகையைவிடவும் சில லட்சங்கள் மட்டுமே அதிகமாக வசூலித்தது. அதேசமயம் அஜித்தின் துணிவு படம் 8 கோடி ரூபாய்க்கு அதே ஏரியாவில் விற்பனையாகி 11 கோடி ரூபாயை வசூல் செய்தது. அப்படி பார்த்தால் வாரிசு படத்தைவிடவும் துணிவு படம்தான் அதிகளவு வசூலை குவித்தது. துணிவு படம்தான் ஹிட்டானது என்று சொல்ல வேண்டும்.

பி.ஆர்.டீம்: ஐந்து ரூபாயை முதலீடாக போட்டு 50 ரூபாயை லாபம் எடுப்பது பெரிதா இல்லை 49 ரூபாயை முதலீடாக போட்டு ஒரு ரூபாயை லாபமாக எடுப்பது பெரிதா?. இங்கு விஜய்க்கென்று பக்காவான பி.ஆர்.டீம் இருக்கிறது. ஐடி விங்கும், பி.ஆர்.ஓ டீமும் விஜய்யை பற்றி ஓவராகவே ஹைப் ஏற்றுகிறார்கள். அதை செய்ய வேண்டாம் என்றுதான் நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் உண்மையை பேச வேண்டும்" என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X