’கோட்’ இறுதிக்கட்ட ஷூட்டிங்.. மீண்டும் வெளிநாட்டுக்கு பறந்த விஜய்.. விமான நிலைய வீடியோ டிரெண்டாகுது!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், படத்தின் டீ ஏஜிங் பணிகளுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இந்தப் படத்துக்கு அதிகமாகவே உள்ளது என்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.

தேர்தலில் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக ரஷ்யாவில் இருந்து துபாய்க்கு வந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நடிகர் விஜய் ஆற்றியிருந்தார். அதன் பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் வெளிநாட்டுக்கு பறந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில்: அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய போதே நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், சில சிக்கல் காரணமாக அந்த வாய்ப்பு தள்ளிப் போனது. சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி மிரட்டிய வெங்கட் பிரபு அந்த படம் முடிந்து விஜய்யை சந்தித்து கதையை சொல்ல இந்த படமும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக வித்தியாசமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தாறுமாறான டைட்டிலை வைத்து விஜய்யை வயதான தோற்றத்திலும், நடுத்தர வயது தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் வைத்து படத்தை வெங்கட் பிரபு வித்தியாசமாக உருவாக்கி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம்: கோட் மற்றும் தளபதி 69 படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மக்களுக்கு சேவை செய்யப் போவதாக தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த நிலையில், நடிகர் விஜய் அறிவித்திருந்தார். தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வத்தை செலுத்தி வரும் விஜய் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளார்.
விமான நிலையத்தில் விஜய்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மாணவர்களுக்கு விஜய் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். விரைவில் சந்திப்போம் என்கிற அறிவிப்பும் வெளியானது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் இந்த ஆண்டும் பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இன்று மீண்டும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு விஜய் வந்த காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றன. துபாய் வழியாக அமெரிக்கா செல்லப் போகிறார் விஜய் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications