தடைப்பட்ட சூட்டிங்.. விஜய் விசாகப்பட்டினத்திற்கு பயணம்.. விஜய் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்றபோது படப்பிடிப்பின் புகைப்படங்கள் லீக்காகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இறுதிக்கட்ட சூட்டிங் துவங்கியது.

கனமழையால் தாமதமான சூட்டிங்

கனமழையால் தாமதமான சூட்டிங்

படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்துவதில் கடந்த ஒரு வாரமாக சிக்கல் நீடித்து வருகிறது. ஐதராபாத்தில் கனமழை பெய்து வருவதால் படத்தின் சூட்டிங் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திரையுலகினர் போராட்டம்

திரையுலகினர் போராட்டம்

இதனிடையே நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி நாளை முதல் திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையடுத்தும் வாரிசு படத்தின் சூட்டிங் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரின் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் சூட்டிங் தொடர்வதில் பிரச்சினை காணப்படுகிறது.

விசாகப்பட்டினத்திற்கு பயணம்

விசாகப்பட்டினத்திற்கு பயணம்

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய நடிகர் விஜய் தற்போது மீண்டும் சூட்டிங்கை தொடர விசாகப்பட்டினத்திற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரை சென்னை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Thiruchitrambalam | Kutty Story சொன்ன Dhanush, Audio launch சுவாரஸ்யம்! *Kollywood
விமானநிலையத்தில் விஜய்

விமானநிலையத்தில் விஜய்

விமானநிலையத்தில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் உடனடியாக வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் பிட்டான விஜய்யை பார்க்க முடிந்தது. ஜாலியான கேரக்டரில் அவர் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கு சிறப்பான கலகலப்பான விஜய் கிடைப்பார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X