விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. எஸ்.ஏ.சி இப்படி சொல்லிருக்காரே.. என்னனு நீங்களே பாருங்க

சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இப்போது இரண்டாவது இன்னிங்ஸை திரைத்துறையில் தொடங்கியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய படங்களில் மாரீசன் மட்டும் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பேங் பேங், போர் முழக்கம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

வடிவேலு செம பிஸியாக ஓடிக்கொண்டிருந்த காலம் அது. அவர் இல்லாமல் எந்தப் படமும் இல்லை என்ற நிலைமைதான் இருந்தது. அப்போது அவருக்கும்,மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்துக்குமிடையே சின்ன பிரச்னை ஏற்பட்டது. அது நாளாக நாளாக வளர; வடிவேலுவும் திமுக மேடைகளில் ஏறி அந்தக் கட்சிக்கு ஆதரவாக 2011ல் பரப்புரை செய்ததோடு மட்டுமில்லாமல்; விஜயகாந்த்தையும் கடுமையாக சாடினார்.

Vijay Held His Own Against Vadivelu in Sachein Says SAC
Photo Credit:

ஓரங்கட்டப்பட்ட வடிவேலு: ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெற; வடிவேலுவின் நிலைமை மோசமானது. ஒருகட்டத்தில் முழுவதுமாக திரைத்துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பிறகு ஒருவழியாக அத்தனை பிரச்னைகளும் பேசி முடிக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கம்பேக் கொடுத்த அவர்; மாமன்னன், கேங்கர்ஸ், மாரீசன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் மாரீசனும், மாமன்னனும்தான் பெரிய வரவேற்பை பெற்றன.

Also Read
முதலமைச்சர் விஜய் செம ஜாலி.. பிரக்ஞானந்தவுடன் செஸ் ஆட்டம்.. என்ன ரிசல்ட் தெரியுமா?
முதலமைச்சர் விஜய் செம ஜாலி.. பிரக்ஞானந்தவுடன் செஸ் ஆட்டம்.. என்ன ரிசல்ட் தெரியுமா?

ஃபார்ம் அவுட்டில் வடிவேலு:முக்கியமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, கேங்கர்ஸ் ஆகிய படங்களில் அவர் செய்த காமெடிகள் எதுவும் துளிகூட ஒர்க் அவுட் ஆகவில்லை. அதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், 'ஒருகாலத்தில் வடிவேலு என்ன செய்தாலும் சிரிப்பு வரும்; இப்போதோ காமெடிக்கு ரொம்பவே மெனக்கெடுகிறார். பழைய பாடி லாங்குவேஜையே கொடுக்கிறார்' என சகட்டுமேனிக்கு விமர்சித்தார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி: இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் அதையும் திருத்திக்கொள்வார் என்பது வைகை புயல் ரசிகர்களின் நம்பிக்கை. அடுத்ததாக அவர் பேங் பேங், போர் முழக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். விரைவில் அந்தப் படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது

என்ன பேட்டி?: அவர் கொடுத்த அந்தப் பேட்டியில், "விஜய்யின் நடிப்பை பாராட்டியது சச்சின் படத்தில்தான். அந்தப் படத்தில் வடிவேலு இருந்தார். ஆனால் அவர் அதில் காணாமல் போய்விடுவார். அவர் எவ்வளவு பெரிய காமெடியன். அவருக்கு ஈடு கொடுப்பது சாதாரண விஷயமில்லை. அந்த இயக்குநர் ஜான் மகேந்திரனைத்தான் பாராட்ட வேண்டும். இப்போது சச்சினை பார்த்தாலும் என்ஜாய் செய்ய அவ்வளவு இருக்கும். அவரது பாடி லாங்குவேஜ் எல்லாம் அவ்வளவு சூப்பராக இருக்கும். அந்தப் படம் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் வீட்டில் விஜய்யிடம், 'சூப்பராக நடித்திருக்கிறாய்' என கூறினேன்" என்றார். முன்னதாக, விஜய் முதலமைச்சரானதிலிருந்து திரைத்துறையை சேர்ந்த பெரும்பாலானவர்கள் நேரில் சென்று சந்தித்தார்கள். ஆனால் வடிவேலு இன்னும் சந்திக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X