»   »  எம்ஜிஆர் தலைப்பு பட வேணும்... ஆனா மேலிடத்தை நினைச்சாதான்...! – யோசனையில் விஜய்

எம்ஜிஆர் தலைப்பு பட வேணும்... ஆனா மேலிடத்தை நினைச்சாதான்...! – யோசனையில் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட படப்பிடிப்பே முடியப் போகிறது. ஆனால் படத்தை இன்னமும் விஜய்60 என்றே அழைக்கிறார்கள். இன்னுமா தலைப்பு கிடைக்கவில்லை என்று கேட்டால் அதற்கு பெரிய விளக்கம் தருகிறார்கள்.

விஜய் படங்களிலேயே மிக வேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தான் நடைபெறுகிறது. முதல் கெட்டப்புக்கான காட்சிகள் முடிந்து இரண்டாவது கெட்டப்புக்கான காட்சிகள் படமாகி வருகின்றன. படத்தை தயாரிக்கும் விஜயா புரடக்‌ஷன்தான் எம்ஜிஆரின் மெகா ஹிட் எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் தயாரிப்பாளர்கள். இதுவும் ஆள்மாறாட்ட கதைதான் என்பதால் எம்ஜிஆரின் மெகா ஹிட் டைட்டிலான எங்க வீட்டுப்பிள்ளையையே தேர்வு செய்திருக்கின்றனர்.

Vijay hesitates to choose MGR movie title

இதில் படக்குழு அனைவருக்குமே சம்மதம். ஆனால் விஜய்க்கு மட்டும் இதில் தயக்கம் இருக்கிறதாம்.

டைட்டிலாக எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் எம்ஜிஆரின் டைட்டில் என்பதால் மேலிடத்தில் இருந்து ஏதேனும் அதிருப்தி ஏற்படலாம்.

அப்படி ஏற்பட்டால் அது தன் கேரியருக்கே ஆபத்தில் முடியலாம் என யோசிக்கிறார் விஜய் என்கிறது தளபதிக்கு நெருங்கிய வட்டாரம். அவர் யோசிப்பதிலும் நியாயமிருக்குதானே!

    English summary
    Vijay is now hesitating to pic MGR's famous title Enga Veettu Pillai due to fear on ruling party.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil