Vijay: பிரம்மாண்ட அரங்கில் மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பார்த்தாலே போதும் என குஷியான ஸ்டூடன்ட்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் ஜூன் 17ம் தேதியான இன்று 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

தென் மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்க வசதியாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் நேற்று இரவு அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

Vijay honors Students today at Neelangarai and Toppers are very happy to meet Thalapathy

நடிகர் விஜய்யை பார்த்தலே போதும் என்றும், விஜய்யை பார்த்தால் என்ன ஆவேன்னு தெரியல என மாணவிகள் உற்சாகமாக சொல்லும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

மாணவர்களை சந்திக்கும் மாண்புமிகு மாணவன்: மாண்புமிகு மாணவன் எனும் படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் தனது பல படங்களில் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

Vijay honors Students today at Neelangarai and Toppers are very happy to meet Thalapathy

விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஆண்டு தோறும் நலத்திட்ட உதவிகளை செய்யும் போது மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்களை வழங்கி வந்த நிலையில், இம்முறை 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.

நீலாங்கரையில் திருமண மண்டபத்தில் விழா: நடிகர் விஜய் மாணவர்களை சந்தித்து பரிசு வழங்க உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீட்டருகே உள்ள பிரம்மாண்ட மண்டபத்தில் இந்த விழா இன்று நடைபெற உள்ளது.

Vijay honors Students today at Neelangarai and Toppers are very happy to meet Thalapathy

அதற்காக மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் விழா நடைபெறும் மண்டபத்துக்கு குவிந்து வருகின்றனர்.

பக்கா கவனிப்பு: மாவட்ட வாரியாக அல்லாமல், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களை அழைத்து பரிசு வழங்க உள்ளார் நடிகர் விஜய். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் இரவு தங்குவதற்கான ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செய்துள்ளது.

உணவு, உறைவிடம் என அனைத்து வசதிகளும் செய்து நீலாங்கரையில் நடைபெறும் விழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

விஜய்யை பார்த்தாலே போதும்: மாணவர்களும் மாணவிகளும் நடிகர் விஜய்யை பார்த்தாலே போதும் என ரொம்பவே குஷியாகி உள்ளனர். நடிகர் விஜய்யை ஓவியமாக வரைந்த படங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் காட்டுவதற்கு ஆவலாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X