ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஆப்செண்ட்.. மணமக்களுக்கு வீட்டில் விருந்து வைக்கும் விஜய்?

சென்னை: தமிழ் சினிமாவில் வசூல் ராஜாவாக வலம் வரும் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் ஜன நாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகிறது. சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து அவர் ஒரு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டில் கமர்ஷியல் ஹீரோக்களில் விஜய்க்கு என்று தனி இடம் உண்டு. இடையில் ரஜினிகாந்த்துக்கு சில தோல்வி படங்கள் அமைந்தன. இதன் காரணமாக விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பேசினார்கள். அதற்கேற்றபடி அவரது படங்கள் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டன. அதேசமயம் அவர் நடித்த வாரிசு திரைப்படம் பெருத்த நஷ்டத்தை தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு கொடுத்ததாகவும் ஒரு தகவல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம்: நிலவரம் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்திலிருந்து தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதேபோல் பாஜகவும் தங்களது எதிரிதான் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது என்ன மாதிரியான காட்சிகள் வேண்டுமானால் அரங்கேறலாம்; சொல்லப்போனால் விஜய் திமுகவுடன்கூட கூட்டணி வைக்கலாம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதுதான் தவெகவினரின் கருத்து.

ஜன நாயகன் விஜய்: அரசியல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தனது கடைசி படம் என அவர் அறிவித்திருக்கும் ஜன நாயகன் படத்திலும் நடித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

Vijay hosts a party for producer Isari Ganesh s daughter at his home

தளபதி வெற்றிக்கொண்டான்: இந்தப் படத்தில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும்; அவரது கேரக்டர் பெயர் தளபதி வெற்றிக்கொண்டான் என்றும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஜன நாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் காவல் துறை சீருடையில் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. மேலும் தளபதி வெற்றிக்கொண்டான் என்பதை ஆங்கிலத்தில் TVK என்றும் அழைக்கலாம்; அதற்காகத்தான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ என்றும் ரசிகர்கள் கேள்விகள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

ஐசரி கணேஷ் மகள் திருமணம்: இதற்கிடையே கோலிவுட்டில் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷின் மகள் லாவண்யாவின் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள். ரவி மோகன்கூட தன்னுடைய தோழி கெனிஷாவுடன் வந்திருந்தது பெரிய பேசுபொருளானது எனது குறிப்பிடத்தக்கது.

விஜய் எடுத்திருக்கும் முடிவு: ஆனால் விஜய் அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அரசியல் மீட்டிங், ஜன நாயகன் ஷூட்டிங் என்று பிஸியாக இருப்பதால்தான் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஐசரி கணேஷின் மகளையும், மகனையும் தனது வீட்டுக்கு நேரில் அழைத்து விருந்து ஒன்றை வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் விஜய். மணமக்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை மாலத்தீவுக்கு அழைத்து செல்லவிருக்கிறார் ஐசரி கணேஷ். எனவே அந்த மாலத்தீவு ப்ரோக்ராமுக்கு முன்னதாகவே இந்த விருந்தை வைத்துவிட விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X