அவங்க கேட்ட ஒரு ரெக்வஸ்ட்.. உடனே ஓடி வந்து கட்டியணைத்த விஜய்.. நெகிழ்ச்சி தருணம்!
சென்னை: அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சன் டிவியில் அறிவித்தபடி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான லைவ் டெலிகாஸ்ட் தமிழ் ரசிகர்களை டிவியின் முன் கட்டிப் போட்டது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யின் அம்மா ஷோபனா பங்கேற்றனர்.

போலீஸ் ஸ்டேஷன் செட்
கைதி படத்தின் புரொமோஷனுக்காக லாக்கப் செட் பல பிரபல திரையரங்குகளில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா பேக்ரவுண்ட் போலீஸ் ஸ்டேஷன் செட் போலவே அமைக்கப்பட்டிருந்தது. நிச்சயம் கைதி படத்தை போலவே மாஸ்டர் படத்திலும் போலீஸ் ஸ்டேஷன், ரவுடிசம் என பல விஷயங்கள் ஹைலைட் படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

ஒரு ஹக் தரணும்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பாளர், சோபனா அம்மாவிடம் இப்போ நடிகர் விஜய்கிட்ட என்ன கேட்க விரும்புறீங்க? என்ற கேள்விக்கு, விஜய் எனக்கு ஒரு ஹக் தரணும் என பதில் கூறினார். அடுத்த நொடியே, தனது அம்மா மற்றும் அப்பாவை நடிகர் விஜய் கட்டிப் பிடித்து அன்பு மழை பொழிந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய்சேதுபதி முத்தம்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தளபதி விஜய்க்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கொடுத்த முத்த புகைப்படம் வேற லெவலில் வைரலானது. இந்நிலையில், அந்த தருணத்தை ஓவர்டேக் செய்யும் மகிழ்ச்சி தருணமாக, நடிகர் விஜய் தனது பெற்றோரை கட்டிப் பிடித்து பாசத்தை கொட்டியுள்ளது பார்க்கப்படுகிறது.

வணக்கம் மட்டுமே
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் இடையே கை குலுக்கும் பழக்கத்தை உருவாக்கி உள்ள நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் விஜய், வந்திருந்த அனைவரையும் பார்த்து வணக்கம் வைக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











