இணையத்தில் வைரலாகும் விஜயின் ஐடி கார்டு! மகளிர் அணியின் ஃபுட் பால் கோச்சாக மிரட்டும் விஜய்!
சென்னை: போஸ்டர்களை தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் ஐடி கார்டு இணையத்தில் வைரலாகி வருகிறாது.
நடிகர் விஜய் இயக்குநர் அட்லி நடிப்பில் உருவாகும் படம் பிகில். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 21ஆம் தேதி வெளியானது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம்தான் படத்தின் பெயர் பிகில் என தெரியவந்தது. விஜயின் பிறந்த நாள் பரிசாக படத்தின் போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் லுக், செகன்ட் லுக், மூன்றாவது லுக் என வெளியிடப்பட்டன.

டபுள் ஆக்ட்
இந்த போஸ்டர்கள் பெருமளவில் வைரலாகி ட்ரென்ட்டிங்கில் டாப்பில் இருந்தது. இதன் மூலம் படத்தில் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதும் தெரியவந்தது.
காவி வேட்டியில்

பயிற்சியாளர்
கறிக்கடையில் காவி வேட்டியில் வயதில் மூத்தவராக ஒரு விஜயும், ஃபுட் பால் யூனிஃபார்மில் கையில் பாலுடன் ஒரு விஜயும் போஸ்டரில் இருந்தனர். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என கூறப்பட்டது.

ஐடி கார்டு
தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தில் விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மைக்கேல் என்ற பெயருடன்
அதில் விஜய் போட்டோவுடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











