மாஸ்டர் படத்தில் விஜய் பேரு என்ன தெரியுமா? லீக்கான ஐடி கார்டு.. ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே!
சென்னை: மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயின் பெயர் கொண்ட ஐடி கார்டு சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
அவர்கள் மட்டுமின்றி, சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

ஐடி கார்டு
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அப்போது நடந்த சுவாரசிய சம்பவங்களே இன்னும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜயின் போட்டோவுடன் அவரது கேரக்டரின் பெயர் கொண்ட காலேஜ் ஐடி கார்டின் இமேஜ் இணையத்தில் கசிந்துள்ளது.

டீன் பொறுப்பு
இந்த இமேஜ் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி படத்தில் நடிகர் விஜய், ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஸ்டாஃப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லூரியின் பெயரோடு வெளியாகியிருக்கும் அந்த ஐடி கார்டில் விஜய் மாணவர் அஷோசியேஷன் டீன் பொறுப்பில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பிகிலின் போதும்
மாஸ்டர் படத்தில் விஜய் ஜேம்ஸ் துரைராஜ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும் ஜேடி என்று அழைக்கப்படுவார் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில் படத்தின் ஐடி கார்டு லீக்காகி இருக்கிறது. பிகில் படத்தின் போதும் விஜய், ஃபுட்பால் கோச்சாக நடித்திருந்தார். அந்த ஐடி கார்டும் லீக்காகி வைரலானது.

ஸ்பெல்லிங் மிஸ்டேக்
இருப்பினும் மாஸ்டர் படத்தில் விஜயின் ஐடி கார்டில், science என்பது sceince என ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் உள்ளது. இதனால் இந்த ஐடி கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் லீக்கான குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











