Vijay: விஜய்க்கு முதலமைச்சர் ராசி இருக்கு... அன்றே கணித்த இளையராஜா... ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். சினிமாவில் இருந்து விலகி இனி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் தமிழ்நாடு அரசியலில் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இளையராஜா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் எதிர்காலத்தை கணித்த இளையராஜா
கடந்த மூன்று தினங்களாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் தான் பிரேக்கிங் நியூஸ்ஸாக உள்ளது. திடீரென தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்த விஜய், இனி அரசியல் மட்டும் தான் தனது பயணம் என குறிப்பிட்டிருந்தார். மேலும், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்தும் விலகுவது உறுதியாகியுள்ளது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாஜக, பாமக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மறைந்த விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் விஜய்யின் தவெக-வும் 2026 தேர்தலில் போட்டியிட காத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் விஜய்யும் போட்டியிடவுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 2026 தேர்தலில் விஜய்யால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அதற்கடுத்த தேர்தல்களில் நிறைய மாற்றங்கள் நிகழும் என சொல்லப்படுகிறது.
முக்கியமாக இனி தமிழ்நாடு அரசியல் களம் உதய் VS விஜய் என மாறும் என்று அரசியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் அவர் ஆட்சி அமைப்பது பற்றியும் இளையராஜா ஏற்கனவே கணித்துவிட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சினிமா விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் குறித்து இளையராஜா பேசுகிறார். அதில், கமலின் அரசியல் பயணம் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார்.
அதில், "நாட்டை ஆளுபவர்களுடைய தலையெழுத்தை வைத்து அவர்கள் நாட்டை ஆள்வதில்லை. நம்முடைய தலையில் எல்லாம் எழுதிருக்கணும், நாம யார் யாராலா ஆளப்படப் போறோம்ங்குறது..." என குறிப்பிட்டுள்ளார். அப்போது இளையராஜா பேசி முடிக்கவும் கேமரா நேராக விஜய்யை நோக்கி நகர்கிறது. அவரோ எதுவும் தெரியாதது போல இளையராஜா பேசுவதை கூர்மையாக கவனித்து வருகிறார்.
அதாவது, இளையராஜாவின் இந்த பாயிண்ட் நேராக விஜய்க்கு பொருந்துகிறது என்றும், அவரது கணிப்பின் படி விஜய் கண்டிப்பாக முதலமைச்சர் சீட்டில் அமருவார் எனவும் அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவின் இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











