சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...என்னவோ இருக்கு...பீஸ்ட் போஸ்டர் ரகசியம் என்ன?

சென்னை : பீஸ்ட் அறிவிப்பு இன்று வர போவதை நெல்சன் உறுதி செய்த சிறிது நேரத்திலேயே வெள்ளை சட்டையில் ரத்தக் கரையுடன் இருக்கும் விஜய்யின் புதிய ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படம் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. விஜய்யின் 65வது படமாக தளபதி 65 என்ற பெயருடன் இந்த படம் துவங்கப்பட்டு, அதிக எதிர்பார்ப்பை கிளப்பியது. படம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

துப்பாக்கியுடன் விஜய்

துப்பாக்கியுடன் விஜய்

தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களின் படத்தின் டைட்டிலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த இரு போஸ்டர்களிலுமே விஜய் கையில் பெரிய துப்பாக்கியுடன் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் பல ஸ்டில்கள், போஸ்டர்கள், பாடல்கள் என பலவும் அவ்வப்போது வெளியிடப்பட்டன.

இதெல்லாம் கவனிக்கலியே

இதெல்லாம் கவனிக்கலியே

ஆனால் இதுவரை வெளியிடப்பட்ட பீஸ்ட் படத்தின் பாடல்கள் தவிர மற்ற அனைத்து போஸ்டர்களிலும் விஜய் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் இருப்பது போலவோ அல்லது கையில் ஆயுதத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் தான் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இதுவரை வெளியான பீஸ்ட் படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் விஜய் இறுக்கமான, எமோஷனலான முகத்துடன் இருப்பது போல் தான் உள்ளது. போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருப்பது போல் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் பூஜா ஹெக்டேவோ மற்றவர்களோ ஒரு போஸ்டரில் கூட இல்லை.

அட ஆமாம்ப்பா

அட ஆமாம்ப்பா

பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு, சமீபத்தில் அனைத்து மொழிகளுக்குமான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இந்தி போஸ்டரில் மட்டும் படத்தின் பெயர் பீஸ்ட் என்பதற்கு பதில் 'ரா' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜன்ட் ரோலில் நடிப்பதாக வெளியான தகவலை இந்த போஸ்டர் உறுதி செய்துள்ளது.

Recommended Video

இது Beast vs KGF இல்ல.. Beast and KGF.. டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் Yash பேச்சு
இது தான் பீஸ்ட் ரகசியமா

இது தான் பீஸ்ட் ரகசியமா

இந்த போஸ்டரிலும் இறுக்கமான முகத்துடன் இருக்கும் விஜய். அவருக்கு அருகில் மால் ஒன்றில் கையில் துப்பாக்கிகளுடன் சுடுவதற்கு தயாராக இருக்கும் ராணுவ உடையில் இருக்கும் வீரர்கள் போன்று தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பீஸ்ட் படத்தின் இந்த போஸ்டர்கள் அனைத்தும், படத்தில் அதிக அளவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கி குண்டுகள் பாயும் சத்தம் உள்ளதையும், விடாமல் எதிரிகளை வேட்டையாடுவதை தான் படம் முழுக்க விஜய்யின் வேலை என்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த படத்திலும் ஹீரோயின் பாடலுக்கு மட்டும் தான் வந்து போவார் என்பதும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X