Vijay in Jawan: ஜவானில் விஜய்... ஷாருக்கான், அட்லீக்காக இப்படியொரு கேமியோ ரோலில் தளபதியா..?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஷாருக்கான், அட்லீக்காக தளபதி விஜய்யும் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவானில் கேமியோ ரோலில் நடிக்கும் விஜய்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்துள்ளார். கோலிவுட்டில் மாஸ் காட்டிய இயக்குநர் அட்லீ, இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாகிறார். ஷாருக்கான் கொடுத்த முதல் வாய்ப்பை அட்லீ எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை பார்க்க கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்துள்ளது. ஜூன் மாதம் வெளியாகவிருந்த ஜவான் தற்போது செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.
ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜவான் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜவான் மூலம் அட்லீ பாலிவுட்டில் செம்ம மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார். விஜய்யின் செல்ல தம்பிகளில் அட்லீ ரொம்பவே முக்கியமானவர் என்பது கோலிவுட்டே அறிந்தது. அவரது பர்த்டே பார்ட்டியில் விஜய், ஷாருக்கான் இருவருமே கலந்துகொண்டு செம்மையாக ஆட்டம் போட்டிருந்தனர். அதேபோல், விரைவில் விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்தாலும் அபிஸியலாக இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த சூழலில் தற்போது மீண்டும் இந்த செய்திகள் வைரலாகி வருகின்றன. அதாவது ஷாருக்கான், அட்லீ இருவருக்காகவும் ஜவானில் விஜய் கேமியோவாக நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதேபோல், இந்தப் படத்தில் விஜய்யின் கேரக்டர் பற்றியும் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லீ இயக்கிய தெறி படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் சீக்வெல்லாக இந்த கேரக்டர் இருக்கும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், இந்த செய்தி விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











