அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அரசியல் தலைவராகவே மாறியுள்ள தளபதி விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவுகள் ஆரம்பித்த நிலையில், காலை 7 மணிக்கே நடிகர் அஜித் ஓட்டுப் போட்டு விட்டார். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்சேதுபதி, குஷ்பு, சுந்தர். சி, திரிஷா, ஆண்ட்ரியா, ஹரிஷ் கல்யாண் என பல பிரபலங்கள் வாக்கு செலுத்தி சென்றனர்.

நடிகர் விஜய் ஓட்டுப்போட வருவாரா? மாட்டாரா? என கேள்வி எழுப்பி விஜய் வருவதற்கு முன்னதாக மீம் போட்டு கலாய்த்தால் தான் உண்டு என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காலையிலேயே ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

Vijay injured in his hand reveals after he cast his vote upsets fans

ஆனால், தற்போது ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் விஜய் ஓட்டுப் போட்டு சென்றுள்ளார். அவரது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்து தளபதி ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.

Vijay injured in his hand reveals after he cast his vote upsets fans

வாக்களித்தார் விஜய்: சினிமாவை தாண்டி அரசியலில் தனது சர்க்காரையே அமைக்க வேண்டும் என்கிற முடிவில் உள்ள நடிகர் விஜய் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட்டுலேயே அரசியலை மிக்ஸ் செய்து பாடலை அமைத்திருந்த நிலையில், ஓட்டுப் போடாமல் கோட் படத்தின் படப்பிடிப்பில் ஷூட்டிங்கை தொடர்ந்தால் கடுமையாக விமர்சிக்கப்படுவார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா என அதிரடியாக காரில் தனது வீட்டில் இருந்து கிளம்பிய விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

Vijay injured in his hand reveals after he cast his vote upsets fans

வெள்ளை சட்டை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இனிமேல் இப்படித்தான் என்பது போல அடிக்கடி வெள்ளை சட்டையை அணிந்து கொண்டே வலம் வருகிறார். ஓட்டுப் போட இன்று வந்த நடிகர் விஜய் பளிச்சென பக்காவாக வெள்ளை சட்டை அணிந்துக் கொண்டு வந்து தனது வாக்கினை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.

Vijay injured in his hand reveals after he cast his vote upsets fans

கையில் என்ன காயம்?: நடிகர் விஜய்யின் இடது கையில் காயம் ஏற்பட்டு பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை அவர் ஓட்டுப் போடும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதும் பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் விட்டனர். கோட் படத்தின் படப்பிடிப்பில் ஏதோ பெரிய ரிஸ்க்கான காட்சியில் நடித்த போது கையில் அடிபட்டு இருக்கும் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X