தலைவர் ஹெல்த் எப்படி இருக்கு.. ஜெயிலர் கலை இயக்குநரிடம் விசாரித்த விஜய்.. என்ன மனுஷன்யா!

சென்னை: ஜெயிலர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கே சீக்கிரம் போ நெல்சா என போன் பண்ணி அனுப்பி வைத்ததே தளபதி விஜய் தான் என கலை இயக்குநரும் நடிகருமான கிரண் சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் வெளியான நிலையில், நடிகர் விஜய்க்கு எதிராகவே பாடல்கள் உருவாக்கப்பட்டன என சர்ச்சைகள் வெடித்தன. மேலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா - கழுகு குட்டிக் கதையும் நடிகர் விஜய்யை டார்கெட் செய்து தான் பேசினார் என சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

Vijay inquires abour Rajinikanths health condition to Jailer Art Director Kiran

இப்படியொரு சர்ச்சை கிளம்பிடுமோ என பேசியதும் நினைத்து தான் உடனடியாக சூப்பர்ஸ்டாரே அங்கேயே நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, நீங்களா எதையும் கிளப்பிடாதீங்க என பேசியிருந்தார்.

ஜெயிலருக்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய்: கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சனுக்கு பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்து முன்னணி இயக்குநராக மாற்றியவர் தளபதி விஜய் தான். மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு போய் ஜெயிலர் படத்தின் கதையை சொல்லுங்க என புஷ் பண்ணியதும் விஜய் தான் என நெல்சன் கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயிலர் படத்தின் கலை இயக்குநர் கிரண் ஜெயிலர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரம் கிளம்பிப் போகச் சொன்னதே நடிகர் விஜய் தான் என்கிற சூப்பரான தகவலை கூறி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Vijay inquires abour Rajinikanths health condition to Jailer Art Director Kiran

தலைவர் ஹெல்த் எப்படி இருக்கு: ரஜினி சார் என்றெல்லாம் விஜய் சொல்லமாட்டார். தலைவர் என்று தான் கூப்பிடுவார். தெலுங்கு படத்தின் ஷூட்டிங் ஒன்றுக்காக சென்றிருந்தேன். அங்கே தான் வாரிசு ஷூட்டிங்கும் நடந்தது. நான் வந்ததை அறிந்ததும் ஓடிவந்து கட்டியணைத்து நலம் விசாரித்த விஜய் தலைவர் ஹெல்த் எப்படி இருக்கு என விசாரித்தார்.

நல்லா ஆக்டிவா இருக்காரா, படம் எப்படி வந்துட்டு இருக்கு என விசாரித்தார். நெல்சன் ஜாலியா படம் பண்ணிட்டு இருக்காரு சார் தலைவரு ரொம்பவே ஹேப்பி என்றவுடனே ஆமாம், நெல்சன் எல்லாரையும் கலகலப்பா வச்சிருப்பான்னு சொன்னார் என கலை இயக்குநர் கிரண் கூறியுள்ளார்.

Vijay inquires abour Rajinikanths health condition to Jailer Art Director Kiran

ரசிகர்கள் திருந்துவார்களா: நடிகர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வந்தாலும், ரசிகர்கள் தான் தொடர்ந்து மோசமான சண்டைகளை போட்டுக் கொண்டு ஒட்டுமொத்த நடிகர்களையும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் தெலுங்கு சினிமா, கன்னட சினிமா வசூலில் மிகப்பெரிய இடத்துக்கு முன்னேறி இருப்பது போல கோலிவுட்டும் முன்னேற முடியும் என்று சூப்பர்ஸ்டாரே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியதையும் குறிப்பிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X