தட்டுல சோத்த போட்டுட்டு சதா நியூஸ்.. படம் பார்க்க முடியல.. புலம்பும் இளைஞர்கள்!

சென்னை: தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக் என்றால் அது விஜய் தான். தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதலமைச்சராக பதவியேற்ற விஜய், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த அரசியல் பரபரப்பில் அதிகம் என்ஜாய் பண்ணுவதும், மீம்ஸ் போட்டு கேலி செய்வது யார் தெரியுமா? இளைஞர்கள் தான்.

புலம்பும் நெட்டிசன்ஸ்: ஏவன் எங்கேடு கெட்ட எனக்கு என்ன என்று, கையில் போனை வைத்துக்கொண்டு IPL மேட்ச், திரைப்பட அப்டேட், ரீல்ஸ் என்று இருந்த பல இளைஞர்கள், இப்போது எத்தனை எம்எல்ஏ?, பெரும்பான்மை எவ்வளவு?, எத்தனை எம்எல்ஏ வந்த ஆட்சி அமைக்கலாம், யார் எந்த பக்கம் வருவாங்க, "ஃப்ளோர் டெஸ்ட் என்ன நடக்கும் என்று அரசியல் டெர்ம்ஸ்களையே கூகுளில் தேடி தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது பலர் கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு, டிவி முன்னால் அமைந்து நியூஸ் சேனலை மாற்றி மாற்றி பார்த்தனர்.

Vijay CM Vijay

மீம்ஸ்: இதையெல்லாம் கலாய்த்து சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. ஒரு இளைஞர் 'டிஎம்கே, ஏடிஎம்கே ஆட்சியே நடத்தட்டும்... ஏன் என்றால் ஒரு படம் கூட பார்க்க முடியல... தினமும் நியூஸ் பார்த்துட்டே இருக்கேன்" என்றும், சட்டசபைனா என்னனே எனக்கு தெரியாது... ஆனா லைவ் பார்த்துட்டு இருந்தேன் என்று ஒரு இளைஞர் ஜாலியாக பதிவிட்டு உள்ளார்.

ஃப்ளோர் டெஸ்ட்டா?: அதே மற்றொருவர், நாளைக்கு கருப்பு படம் ரிலீஸ் ஆகுது புக் பண்ணுடானு என் நண்பன் கிட்ட சொன்னா அவன் சட்டசபையில் "ஃப்ளோர் டெஸ்ட்" பாத்துக்கிட்டு இருக்கேனு சொல்றான், ஃப்ளோர் டெஸ்ட் என்னன்னே தெரியாது... ஆனா இன்னைக்கு முழுக்க அதைத்தான் பார்த்தேன். இப்படியே போனால் நானும் அரசியலுக்கு வந்துடுவோமோ என்று நெட்டிசன்கள் ஜாலியாக பதிவிடும் பதிவுகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ஒரு பக்கம் அரசியல் சூடு பிடித்தாலும், இன்னொரு பக்கம் இளைஞர்களிடம் அரசியல் ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது என்பதே பலரின் கருத்து. முன்பு சினிமா டயலாக் பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு, இப்போது "மெஜாரிட்டி யாருக்கு, அசெம்ப்ளி, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று விவாதிப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Read more about: vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X