Vijay Instagram: வாங்கண்ணா விஜய்ணா... இன்ஸ்டா ஸ்டோரியில் க்யூட்டாக வரவேற்ற சிம்பு!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் நேற்று மாலை திடீரென இன்ஸ்டாவில் இணைந்து அதிரடி காட்டினார்.
ஹலோ நண்பாஸ், நண்பிஸ் என்ற கேப்ஷனுடனும், லியோ லுக்கில் இருக்கும் போட்டோவுடனும் தனது இன்ஸ்டா கணக்கை தொடங்கினார்.
விஜய் இன்ஸ்டாவில் இணைந்த 20 நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், விஜய்யை வரவேற்று சிம்பு வைத்துள்ள ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஹலோ நண்பாஸ் நண்பிஸ்
கோலிவுட் தளபதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் மாஸ்டராகவும் கலக்கி வரும் விஜய், இன்ஸ்டாகிராமிலும் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். நேற்று மாலை திடீரென இன்ஸ்டாவில் இணைந்த விஜய், 'ஹலோ நண்பாஸ், நண்பிஸ்' என அவரது ஸ்டைலில் கேப்ஷன் கொடுத்து என்ட்ரி ஆனார். இதனால் உற்சாகமான அவரது ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நடிகர் விஜய்யை ஃபாலோ செய்து வருகின்றனர்.

சிம்புவின் இன்ஸ்டா ஸ்டோரி
இந்நிலையில், இன்ஸ்டாவில் இணைந்த விஜய்யை செம்ம க்யூட்டாக வரவேற்றுள்ளார் நடிகர் சிம்பு. அஜித்தின் தீவிரமான ரசிகரான சிம்பு, சில வருடங்களாகவே விஜய்யின் நட்பு வட்டத்தில் நெருக்கமாக காணப்படுகிறார். வாரிசு படத்திலும் விஜய்க்காக 'தீ தளபதி' என்ற பாடலைப் பாடி ரசிகர்களுக்கு செம்மையாக வைப் கொடுத்திருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் "வெல்கம் டூ இன்ஸ்டா விஜய்ண்ணா" என விஜய்யின் போட்டோவை வைத்து ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யை வரவேற்க சிம்பு ஸ்டோரி வைத்துள்ளது இருவரது ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது. அதேநேரம் சிம்பு தான் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களுடன் முன்னணியில் இருக்கும் கோலிவுட் நடிகர் ஆவார். 11.7 மில்லியன் ரசிகர்கள் சிம்புவை ஃபாலோ செய்து வருகின்றனர். சிம்புவின் இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகர்களாலும் பீட் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தற்போது விஜய் இன்ஸ்டாவில் இணைந்துள்ளதால், சிம்புவை அவர் எளிதாக முந்திவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் சாதனை
விஜய் இன்ஸ்டாவில் இணைந்த 20 நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் ஃபாலோ செய்யத் தொடங்கினர். அதுவே 99 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோயர்களை கடந்தது. இதன் மூலம், மிக விரைவாக 10 லட்சம் ஃபாலோயர்கள் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை விஜய் வசமாகியுள்ளது. அதேபோல், BTS இசைக்குழுவின் பாடகர் "வி" என்பவரை 43 நிமிடங்களிலும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை 59 நிமிடங்களிலும் 10 லட்சம் பேர் ஃபாலோ செய்தனர். இந்த வரிசையில் 99வது நிமிடத்தில் 10 லட்சம் ஃபாலோவர்ஸை பெற்று உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளார் விஜய்.

விஜய்யின் இன்ஸ்டா ஸ்டோரி
லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை தான் இன்ஸ்டாவில் டிபியாக வைத்துள்ளார் விஜய். அதேபோல், இன்னொரு போட்டோவை தனது முதல் ஸ்டோரியில் வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களுடன் அதிகம் நெருக்கம் காட்டி வரும் விஜய், தற்போது இன்ஸ்டாவில் வேறு அடியெடுத்து வைத்துள்ளார். அதனால், விஜய் ரசிகர்கள் இதனை செம்மையாக செலிப்ரேட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











