Vijay Instagram: விஜய் இன்ஸ்டாகிராமில் வர இதுதான் காரணம்... பின்னணியில் நயன்தாராவா..?

சென்னை: நடிகர் விஜய் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை தொடங்கினார்.

ஹலோ நண்பாஸ், நண்பிஸ் என்ற கேப்ஷனுடனும், லியோ லுக்கில் இருக்கும் போட்டோவுடன் விஜய்யின் இன்ஸ்டா என்ட்ரி அமைந்தது.

இதுவரை டிவிட்டரில் மட்டுமே வலம் வந்த விஜய் திடீரென இன்ஸ்டா பக்கம் வர என்ன காரணம் என பெரிய விவாதமே நடந்து வருகிறது.

 Vijay Instagram: Vijay started an account on Instagram for politics in future

இந்நிலையில், இதுகுறித்து எமது ஒன் இந்தியா சேனலுக்கு பேட்டிக் கொடுத்த சினிமா விமர்சகர் அந்தணன் விளக்கம் கொடுத்துள்ளார். அதனை இப்போது பார்க்கலாம்.

விஜய்யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரி
தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல்ஹாசனுக்குப் பிறகு மாஸ் ஹீரோவாக வலம் வருவது விஜய்யும் அஜித்தும் தான். இருவருக்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், விஜய் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். இதுவரை டிவிட்டரில் மட்டும் அக்கவுண்ட் வைத்திருந்த விஜய், திடீரென இன்ஸ்டாவிலும் வந்தது பலருக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது.

 Vijay Instagram: Vijay started an account on Instagram for politics in future

இருப்பினும் விஜய்யின் இன்ஸ்டா என்ட்ரி குறித்து பலவிதமான பேச்சுகள் வந்தன. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன், இதுகுறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார். அதில், விஜய்க்கு எப்போதுமே அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என ஆசை உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்று தான் இன்ஸ்டாவில் அக்கவுண்ட் ஓபன் செய்தது என்றுள்ளார்.

அதாவது, விஜய்யின் மேனஜேரான ஜெகதீஸ் டிவிட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஹேண்டில் செய்வதில் கெட்டிக்காரர். அவர்தான் விஜய்யின் டிவிட்டர் அக்கவுண்டின் அட்மினாக உள்ளார், எதிர்காலத்தில் அரசியலுக்கு போக வேண்டும் என்றால் சோஷியல் மீடியா முக்கியமானதாக இருக்கும். அதனால், இளைஞர்களை குறிவைக்க இன்ஸ்டாவில் அக்கவுண்ட் வேண்டும் என விஜய்க்கு ஐடியா கொடுத்துள்ளாராம்.

 Vijay Instagram: Vijay started an account on Instagram for politics in future

அதனால் தான் விஜய்யும் சரியான நேரத்தில் இன்ஸ்டாவில் ஐடி ஓபன் செய்துள்ளார். மேலும், விஜய்யின் மக்கள் இயக்கம் தொடங்கும் போது, அந்த விழாவுக்கு நயன்தாராவும் வந்திருந்தார். அதனால், எதிர்காலத்தில் நயனும் விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், அவர் தற்போது விக்னேஷ் சிவனுடன் திருமணம், குழந்தைகள் என சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

வரும் 2024 தேர்தல் இல்லையென்றாலும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் களமிறங்கலாம் எனவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைவிட இன்ஸ்டாவில் தான் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் அரசியலில் விஜய்யின் முதல் இலக்கு இளைஞர்கள் தான் என இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் திறந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

 Vijay Instagram: Vijay started an account on Instagram for politics in future

அதனை நிரூபிக்கும் வகையில் விஜய் இன்ஸ்டாவில் இணைந்த 20 நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் ஃபாலோ செய்யத் தொடங்கினர். அதுவே 99 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோயர்களை கடந்தது. அதன்படி இதுவரை மொத்தம் 6.4 மில்லியன் பேர் விஜய்யை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X