Vijay - உங்களுக்கு அறிவு இருக்கா?.. மூத்த நடிகரை அசிங்கப்படுத்தினாரா விஜய்?
சென்னை: Vijay (விஜய்) ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் மூத்த நடிகரை கடுமையாக பேசிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
டாப் நடிகர்களில் ஒருவரான விஜய்யை நம்பி பல கோடி ரூபாய் பணம் போட தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு இப்போது அவர் வளர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் பட்ஜெட் என கூறப்படுகிறது.

கேரியரில் மாற்றம்: விஜய் இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவரது கிராஃபை இப்படி மாஸாக மாற்றியது திருமலை, கில்லி, போக்கிரி போன்ற படங்கள்தான். இதில் போக்கிரி படத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழில் விஜய் தனது தனித்துவமான அசால்ட்டான நடிப்பால் அதகளம் செய்திருப்பார். பிரபுதேவா இயக்கியிருந்த அந்தப் படம் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருந்தது.
போக்கிரியில் நெப்போலியன்: போக்கிரி படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் மூத்த நடிகர் நெப்போலியன் நடித்திருப்பார். அவரும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசும் வசனம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. அதேபோல் பிரகாஷ் ராஜை தூங்க விடாமல் செய்யும் காட்சியும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் மோதல்: இப்படி எவர்க்ரீன் படமான போக்கிரி படம்தான் விஜய்ய்க்கும் நெப்போலியனுக்கும் இடையே விரிசலை உருவாக்கியிருக்கிறது. ஆம் அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தால்தான் நெப்போலியன் இன்றுவரை விஜய்யுடன் பேசுவதையோ, விஜய் படங்களை பார்ப்பதையோ தவிர்த்துவருகிறாராம். இதனை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
அப்படி என்னதான் நடந்தது: இந்நிலையில் விஜய்க்கும், நெப்போலியனுக்கும் அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, நெப்போலியனின் உறவினர்களும், நண்பர்களும் விஜய்யின் தீவிர ரசிகர்களாம். போக்கிரி ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அமெரிக்காவிலிருந்து நெப்போலியனின் நண்பர்கள் வந்திருந்தார்களாம். அவர்கள் விஜய்யுடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆசைப்பட்டார்களாம்.

தடுத்த பவுன்சர்: இதனையடுத்து விஜய் சக நடிகர்தானே என்ற எண்ணத்தில் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு விஜய் இருக்கும் கேரவனுக்கு சென்றாராம் நெப்போலியன். ஆனால் கேரவனுக்கு வெளியே இருந்த பவுன்சர் நெப்போலியனை தடுத்துவிட்டாராம். ஆனால் அவருடன் வாக்குவாதம் செய்து விட்டு கேரவனுக்குள் நுழைய முயன்றாராம் நெப்போலியன்.
அப்போது உள்ளே இருந்த விஜய் "உங்களுக்கு அறிவு இருக்கா" என்ற தொனியில் கடுமையாக பேசிவிட்டதாகவும், அதனால்தான் விஜய்யை நெப்போலியன் வெறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. நெப்போலியன் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











