twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த தைரியம் இருக்கே.. இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்த தயங்காத மாஸ்டர்.. விஜய் பர்த்டே ஸ்பெஷல்!

    |

    சென்னை: "இந்த ஏரியா.. அந்த ஏரியா.. உங்க இடம்.. எங்க இடம்.. ஆல் ஏரியாவுல ஐயா கில்லி டா" என சொல்வது போல உண்மையாகவே கெத்தான ஆள் தான் நடிகர் விஜய்.

    வரும் திங்கள் அன்று தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள், அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    சமூக வலைதளங்களில் தினமும் நடிகர் விஜய் பற்றிய செய்திகளும், காமன் டிபி, பர்த் டே மாஷப் என களைகட்டுகிறது.

    திறமையான இளைஞர்களுக்கு இப்போ இல்லை, ஆரம்ப காலத்தில் இருந்தே நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் வருகிறார்.

    என்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது.. சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோவின் டச்சிங் போஸ்ட்!என்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது.. சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோவின் டச்சிங் போஸ்ட்!

    லவ் டுடே – 1997

    லவ் டுடே – 1997

    1997ம் ஆண்டு வெளியான விஜய்யின் லவ் டுடே படத்தை அறிமுக இயக்குநரான பாலசேகரன் இயக்கி இருந்தார். இயக்குநர் பாலசந்தரின் மாணவரான பாலசேகரனை நம்பி தனது படத்தை அப்பவே இயக்க கொடுத்து இருந்தார் தளபதி விஜய். லவ் டுடே படத்தின் பாடல்கள் எல்லாம் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே படத்திற்கு பிறகு பல படங்களை இயக்கிய பாலசேகரன், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கி வருகிறார்.

    நினைத்தேன் வந்தாய் – 1998

    நினைத்தேன் வந்தாய் – 1998

    முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, விஐபி உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்த செல்வ பாரதியை 1998ம் ஆண்டு நினைத்தேன் வந்தாய் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய். ரம்பா, தேவயாணி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்த படம் 'பெல்லி சந்ததி' எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்.

    துள்ளாத மனமும் துள்ளும் – 1999

    துள்ளாத மனமும் துள்ளும் – 1999

    நடிகர் விஜய் மற்றும் சிம்ரனுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியதும் ஒரு அறிமுக இயக்குநர் தான். 1999ம் ஆண்டு வெளியான அந்த படத்தை இயக்குநர் எழில் இயக்கி இருந்தார். பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி படங்களை இயக்கிய அவர், தற்போது, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், தேசிங்குராஜா என காமெடி படங்களை இயக்கி வருகிறார்.

    ஷாஜகான் – 2001

    ஷாஜகான் – 2001

    விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஷாஜகான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், ரொமான்டிக் படமான விஜய்யின் ஷாஜகானை தளபதி ரசிகர்கள் இன்னமும் வெறித்தனமாக விரும்பி வருகின்றனர். அந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி அப்புலு இயக்கி இருந்தார்.

    தமிழன் – 2002

    தமிழன் – 2002

    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு கோர்ட் டிராமா படமாக வெளியான தமிழன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை அறிமுக இயக்குநர் அப்துல் மஜித் என்பவர் இயக்கி இருந்தார். பின்ன, சில படங்களை இயக்கிய அவர், கடைசியாக சதா நடிப்பில் வெளியான டார்ச்லைட் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    திருமலை - 2003

    திருமலை - 2003

    மற்ற நடிகர்கள் போல, தெரிந்த இயக்குநர்களுடன் தொடர்ந்து கை கோர்க்காமல், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதுப்புது இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் விஜய்க்கு உண்டு. விஜய், ஜோதிகா, ரகுவரன் நடிப்பில் வெளியான திருமலை படத்தை இயக்குநர் ரமணா இயக்கி இருந்தார்.

    மதுர – 2004

    மதுர – 2004

    திருமலை படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு ஆக்‌ஷன் ஹீரோவாக முழுதாக களமிறங்கிய நடிகர் விஜய், 2004ம் ஆண்டு அறிமுக இயக்குநர் ரமணா மாதேஷ் இயக்கத்தில் வெளியான மதுர படத்தில் கலெக்டராக நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரும் முதல்வன் படத்தின் இணை இயக்குநருமான மாதேஷ் இயக்கத்தில் உருவான மதுர திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    திருப்பாச்சி – 2005

    திருப்பாச்சி – 2005

    வெற்றியோ, தோல்வியோ எதுவந்தாலும் கொஞ்சமும் கலங்காது தைரியத்துடன் மீண்டும் ஒரு அறிமுக இயக்குநருக்கு 2005ம் ஆண்டு வாழ்க்கை தந்தார் நடிகர் விஜய். பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் தங்கச்சி பாசத்துடன் வெளியான திருப்பாச்சி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், சிவகாசி படத்துக்கு மீண்டும் பேரரசு உடன் கூட்டணி வைத்தார்.

    சச்சின் – 2005

    சச்சின் – 2005

    ஒரே ஆண்டில் இரு இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமையையும் நடிகர் விஜய் பெற்றுள்ளார். பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனை சச்சின் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன் நடிப்பில் வெளியான சச்சின் படமும் ரசிகர்களின் ஃபேவரைட் தான்.

    வேட்டைக்காரன் – 2009

    வேட்டைக்காரன் – 2009

    விஜய், அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கியதும் ஒரு அறிமுக இயக்குநர் தான். இயக்குநர் பாபு சிவன் இயக்கத்தில் தெறி மாஸாக வெளியான வேட்டைக்காரன் படம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு தனது மகன் சஞ்சயை திரையில் அறிமுகப்படுத்தி இருந்தார் விஜய்.

    இளம் இயக்குநர்கள்

    இளம் இயக்குநர்கள்

    இது மட்டுமன்றி, இளம் இயக்குநர்களின் திறமையை எப்போதும் ஊக்கப்படுத்தும் கோலிவுட் கிங்காக நடிகர் விஜய் விளங்கி வருகிறார். எஸ்.ஜே. சூர்யாவுக்கு குஷி படத்தை கொடுத்த விஜய், அட்லிக்கு தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். தற்போது இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு விஜய் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்துக் கிடக்கிறது.

    English summary
    From Love Today to Vettaikaran several times Vijay introduced debutant directors to Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X