நல்ல மனிதருக்கு உதாரணம் விஜய்...நெகிழ்ந்து போன இந்துஜா

சென்னை : 2017 ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். அதன் பிறகு, 2019 ல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் இவருக்கு மிகப் பெரிய திருமுனையாக அமைந்தது.

பிகில் படத்தில் பெண் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருப்பார். அதில் வேம்பு என்ற கேரக்டரில் இந்துஜா நடித்திருந்தார். பிகில் படத்தில் நடித்த பிறகு சமூக வலைதளங்களில் பாப்புலரான நடிகையாக மாறி விட்டார் இந்துஜா. இதனால் இவர் வெளியிடும் ஃபோட்டோக்களும் இணையத்தில் பிரபலமாகின.

Vijay is an inspiration of great humanity: Indhuja

சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது இந்துஜாவிடம், விஜய் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த இந்துஜா, நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் என்றார்.

மனிதநேயத்திற்கும், அளவில்லாத திறமைகளுக்கு அவர் தான் உதாரணம். பல விஷயங்களில் அவர் என்னை கவர்ந்துள்ளார் என்றார். வாழ்க்கையில் சிறப்பான தருணமாக எதை நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, முதல் படத்திலேயே வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கருடன் மேயாத மான் படத்தில் நடித்தது தான் என்றார்.

பிகில் படத்தில் கிடைத்த புகழுக்கு பிறகு தற்போது விஜய் ஆன்டனியுடன் காக்கி படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X