ஜில்லாவில் அப்பா லால் தாதா, மகன் விஜய் போலீஸ்: இது எப்படி இருக்கு?
சென்னை: ஜில்லா படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவும், மோகன் லால் தாதாவாகவும் நடிக்கிறார்களாம்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா. துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.
படத்தில் மோகன்லாலின் மகனாக விஜய் நடிக்கிறார்.

அப்பா தாதா, மகன் போலீஸ்
ஜில்லாவில் மோகன் லால் தாதாவாக நடிக்கிறார். அவரது மகனாக வரும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கதை
ஒரு தாதாவின் மகன் எப்படி போலீஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.

முதல்பாதி கல, கல
படத்தின் முதல்பாதி காதல், காமெடி என்று கல, கலவென இருக்குமாம்.

2வது பாதி ஆக்ஷன்
படத்தின் இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

காஜலும் போலீஸ் தான்
ஜில்லாவில் காஜலும் போலீஸாகத் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக வந்த அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி
முன்னதாக விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த போக்கிரி படம் ஹிட்டானது. அப்போ ஜில்லா?


Click it and Unblock the Notifications











