மீண்டும் அமலா பாலை இயக்குகிறார் விஜய்!
தன் மனைவியாகிவிட்ட அமலா பாலை மீண்டும் திரையில் இயக்குகிறார் விஜய்.
தெய்வத் திருமகள் படத்தில் முதல் முதலாக அமலாவை இயக்கினார் விஜய். தொடர்ந்து தலைவா படத்தில் விஜய் இயக்கத்தில் நடித்தார் அமலா.
இந்தத் தொடர் கூட்டணி, இருவருக்குள்ளும் காதலை ஏற்படுத்த, கடந்த மாதம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

மீண்டும்
தனுஷ் ஜோடியாக அமலா நடித்த வேலையில்லா பட்டதாரி படம் திருமணத்துக்குப் பிறகுதான் வெளியானது. அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றி, மீண்டும் நடிப்பதாக இல்லை என்று கூறி வந்த அமலாவுக்கு நடிப்பாசையை ஏற்படுத்திவிட்டது.

விஜய் அனுமதி
விஜய்யும் தன் மனைவி மீண்டும் நடிக்கட்டும் என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம். அதன் முதல் முயற்சியாக அமலாவை ஒரு நகைக்கடையின் விளம்பரத் தூதராக்கி, ஒரு விளம்பரப் படமும் எடுக்கிறார் விஜய்.
இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

துபாய் நகைக்கடை
இதுகுறித்து அமலாவிடம் கேட்டபோது, "துபாயைச் சேர்ந்த நகைக் கடை ஒன்றின் விளம்பரத் தூதராக நான் ஒப்பந்தமாகியுள்ளேன். இந்தக் கடைக்கான விளம்பரப் படத்தில் என்னை இயக்குபவர் கணவர் விஜய் எனும் போது எனக்கு இரட்டை சந்தோஷம்.

தொடர்வேன்
வேலையில்லா பட்டதாரி எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன. இதே மாதிரி வாய்ப்புகள் வந்தால் நடிப்பைத் தொடர்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











