கமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவு

சென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67'ல் நடிக்கிறார் விஜய்.

இந்நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் கமல் பாணியில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் ரிலீஸில் வாரிசு

பொங்கல் ரிலீஸில் வாரிசு

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும், விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாட;லின் ரீமிக்ஸ் தான் வாரிசு முதல் பாடலாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சூப்பரான திட்டம் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

துபாயில் ப்ரோமோஷன்

துபாயில் ப்ரோமோஷன்

விஜய் பெரும்பாலும் தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கிடையாது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் தோல்வியால் வாரிசு கண்டிப்பாக ஹிட்டாக அமைய வேண்டும் என எதிர்பார்த்துள்ளார். அதனால், வாரிசு படத்தின் ப்ரோமோஷனில் அவரே நேரடியாக கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுவும் அவர் கமல் விக்ரம் படத்தை ப்ரோமோஷன் செய்ததைப் போன்று, வாரிசு ப்ரோமோஷன் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். அதனால், கமல் பாணியில் விஜய்யும் துபாய் பறக்கவுள்ளாராம்.

புர்ஜ் கலீஃபாவில் ட்ரெய்லர்

புர்ஜ் கலீஃபாவில் ட்ரெய்லர்

கமலின் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டத்தில் திரையிடப்பட்டது. அதேபோல், துல்கர் சல்மானின் 'குரூப்' உட்பட சில மலையாள படங்களின் டீசர், ட்ரெய்லர் போன்றவைகளும் புர்ஜ் கலீபா கட்டத்தில் திரையிடப்பட்டன. இப்போது அதே பாணியில் விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லரும் புர்ஜ் கலீபா கட்டத்தில் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய்யும் நேரடியாக துபாய் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் வெறித்தனமான அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X