Vijay - ரஜினி 170 பட பூஜைக்கு எதிராக மக்கள் இயக்கம் மூலம் விஜய் போட்டிருக்கும் ஸ்கெட்ச்?.. பரபரக்கும் தகவல்

சென்னை: Vijay (விஜய்) மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகளை வரும் 26ஆம் தேதி விஜய் சந்திக்கவிருப்பதாகவும் அதற்கு பின்னணியில் பலமான காரணம் ஒன்று இருப்பதாகவும் தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்துக்கான டப்பிங் பணிகளும் இதர இறுதிக்கட்ட பணிகளும் விரைவில் தொடங்குகின்றன. இதற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Vijay is going to meet the executives of the IT wing of the Vijay Makkal Iyakkam on the 26th

விஜய் மக்கள் இயக்க: நடிப்பில் பிஸியாக இருக்கும் தனது மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் கவனம் செலுத்திவருகிறார். உலக பட்டினி தினம், இரவு நேர பாட சாலை என அவரது ஒவ்வொரு மூவ்வும் அரசியலை நோக்கி இருப்பதாகவே பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கோட்டையை ஆளப்போகும் தளபதி, அடுத்த முதலமைச்சர் என அவரது ரசிகர்களும் தொடர்ந்து போஸ்டர்களை அடித்துவருகின்றனர்.

களத்தில் குதித்த விஜய்: அவ்வப்போது மட்டும் நலத்திட்ட உதவிகளில் தலைகாட்டி வந்த விஜய் லியோ படப்பிடிப்பின்போது பிரேக் எடுத்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்தும் ஊக்கத்தொகை வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.

விஜய் பேச்சு: அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. குறிப்பாக, "பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்களையும் படியுங்கள். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்" என்றார். அவரது இந்தப் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி முதல் தலைமுறை வாக்காளர்களை விஜய் டார்கெட் செய்துவிட்டார் என்றும் பலர் கூறினர்.

தொடரும் சந்திப்புகள்: விஜய்யின் அந்தப் பேச்சுக்கு பிறகு மக்கள் இயக்கத்தில் செயல்பாடுகளில் தீவிரமும், வேகமும் தெரிந்தது. அவர் இப்போது இந்தியாவில் இல்லையென்றாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விஜய மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் சந்திப்பு நடந்தது. அது மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது.

Vijay is going to meet the executives of the IT wing of the Vijay Makkal Iyakkam on the 26th

அடுத்த சந்திப்பு: இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகளின் சந்திப்பு வரும் 26ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு விஜய் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிரது. மேலும் இந்தச் சந்திப்பின்போது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் எவ்வாறு வீரியமாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே ரஜினியின் 170ஆவது பட பூஜை அன்றுதான் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒட்டுமொத்த மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் ரஜினி பூஜைக்கு கொடுக்கப்போகும் முக்கியத்துவத்தை தன் பக்கம் திருப்பவே விஜய் அந்த தேதியில் சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் அரசல் புரசலாக தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் இதற்கும் ரஜினி பட பூஜைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கின்றனர் திரைத்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X