ட்விட்டரில் டிரெண்டாகும் #RIPactorVIJAY: யாரும் பயப்பட வேண்டாம், விஜய் நலமாக உள்ளார்
Recommended Video
சென்னை:நடிகர் விஜய் நலமாக உள்ளார். அதனால் ட்விட்டரில் டிரெண்டாகும் #RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை நம்ப வேண்டாம்.
ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். அவ்வாறு மோதும்போது ஏதாவது ஹேஷ்டேகுகளை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக்க விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் மோத #RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை தல ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கிவிட்டனர். தளபதி விஜய் நலமாக உள்ளார். அவர் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
#RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேக் டிரெண்டானதை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோபமாக ட்வீட் போட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எரி கல் ஒன்று நம் பூமி மீது மோதவந்து மிஸ்ஸானது, பல்வேறு நகரங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. நம் நாட்டின் பல பகுதிகளில் பஞ்சமாக உள்ளது, வேதனை அளிக்கும் கிரிமினல் வழக்குகள் பற்றி பேசப்படுகிறது, ஆனால் நம் மாநிலத்தில் உள்ள இளம் தலைமுறையோ #RIPactorVIJAY என்கிறதை டிரெண்ட் செய்யவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.
அஸ்வினின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர் ஒருவரோ, இதை ஆரம்பித்து வைத்ததே விஜய் ரசிகர்கள் தான். தீபாவளிக்கு டபுளாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை திட்டி மீம்ஸ் போடுகிறார்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித்தை கேவலமாக சித்தரித்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். இது இன்று மட்டும் அல்ல பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இப்படி ஒரு விபரீதமான ஹேஷ்டேக்கை டிரெண்டாக்க விட்டுள்ளனர்.
விஜய் பற்றிய ஹேஷ்டேக் டிரெண்டாவதை பார்த்த நடிகர் சிபிராஜும் கோபமாக ட்வீட் போட்டுள்ளார்.
இந்த அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை போட ஏதாவது ஹேஷ்டேகை உருவாக்க அதன் அர்த்தம் புரியாமல் பலர் குழம்பிய கதை எல்லாம் நடந்துள்ளது. வெளிநாட்டவர்கள் சிலர் இந்த ஹேஷ்டேகிற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுள்ளனர். ட்விட்டரில் ஹேஷ்டேகை டிரெண்டாக்கவிடும் திறமை உள்ள அஜித், விஜய் ரசிகர்கள் அதை ஏதாவது நல்ல காரியத்திற்கு பயன்படுத்தலாமே.
அஜித்தும், விஜய்யும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். அவர்கள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தாரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இது புரியாமல் அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து மோதிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











