twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி

    By Siva
    |

    Recommended Video

    ஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ

    சென்னை: விஜய் அழகானவர், சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தார் அனைவரும் நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

    பட வாய்ப்புக்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த சில பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி.

    தமிழ் திரையுலக பிரபலங்கள் குறித்து ஆதாரங்கள் வைத்திருப்பதாக கூறிய அவர் அவற்றை வெளியிடவில்லை.

    விஜய்

    விஜய்

    ஃபேஸ்புக் லைவில் வந்த ஸ்ரீ ரெட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இனி தெலுங்கு படங்களில் நடிக்கப் போவது இல்லை என்ற ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். அஜித் தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், விஜய் அழகானவர் என்றும், சூர்யா, அவரின் குடும்பத்தார் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. கோலிவுட்டில் செட்டிலாக முயற்சிக்கும் நிலையில் அவர் பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்.

    சிம்பு

    சிம்பு

    ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக பேசிய நடிகர் டி. ராஜேந்தரை தலை வணங்குவதாக தெரிவித்த ஸ்ரீ ரெட்டி சிம்பு நல்லவர் என்று கூறியுள்ளார். தற்போது சூர்யா, விஜய், அஜித்துக்கு ஐஸ் வைத்துள்ளார். சென்னைக்கு வந்தபோதே பேட்டிகளின்போது அஜித் தான் ரொம்ப பிடிக்கும், அவர் ரொம்ப அழகு என்று கூறி அவரின் புகைப்படத்தை முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கோலிவுட்டில் செட்டிலாக விரும்புகிறார்.

    அமைதி

    அமைதி

    ஸ்ரீ ரெட்டி பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டதோடு சில நடிகைகளின் பெயர்களையும் வெளியிட்டார். அந்த நடிகைகள் எல்லாம் நடிப்பதை விட வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து அதிகம் சம்பாதிப்பதாக கூறினார். ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து எந்த நடிகையும் வாய் திறக்கவில்லை. அவர் பெயரை எடுத்தாலே பேச்சை மாற்றுகிறார்கள்.

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா

    ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து ஆண்ட்ரியா துணிச்சலாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஸ்ரீ ரெட்டி கூறியது உண்மை என்றால், அதை வெளியே சொல்ல தைரியம் வேண்டும். எனக்கு அது போன்று எதுவும் நடந்தது இல்லை. ஆனால் ஒருவருக்கு அப்படி நடந்திருக்கிறது என்றால் வெளிப்படையாக சொல்வது சரி, மேலும் அதற்கு பின்னால் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

    English summary
    Sri Reddy has appeared on Facebook live and answered the questions asked by fans. She said that Vijay is handsome and Suriya is a good man.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X