டெல்லியில் விஜய்.. சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகன்.. என்ன ஆகப்போகுதோ?.. ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராஜ காலையிலேயே விஜய் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
மேலும், ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தை நாட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் முடிவு செய்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியில் விஜய்யின் கரூர் வழக்கு விசாரணை மற்றும் ஜன நாயகன் படத்தின் சென்சார் விசாரணை உள்ளிட்டவை நடைபெற உள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் நல்ல சேதிக்காக காத்துக்கிடக்கின்றனர்.
விஜய்க்கு சாதகமா? பாதகமா?: கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான நிலையில், அந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என தவெக தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ள நிலையில், அது விஜய்க்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என ஏகப்பட்ட கேள்விகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் தீருமா?: அதே போல சென்னையில் தனி நீதிபதி பி.டி. ஆஷா யு/ஏ சான்றிதழ் வழங்கி படத்தை வெளியிட சொன்ன தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழக்கில் சாதகமான தீர்ப்பு அமையுமா? படத்திற்கு உடனடியாக சென்சார் கிடைத்து படம் இந்த மாதத்துக்குள் வெளியாகுமா? அல்லது மேலும், படத்தின் ரிலீஸ் மற்றும் வழக்கு சிக்கல் ஆகுமா? என்கிற கேள்விகளுக்கும் இன்று பதில் கிடைக்கும்.
டிரெண்டிங்கில் தளபதி விஜய்: கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு தனி விமானத்தில் விஜய் டெல்லிக்கு சென்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், "Thalapathy Vijay" டிரெண்டாகி வருகிறது. இந்த பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாத நிலையில், தியேட்டர் ஓனர்கள் கூடிய சீக்கிரமே புலம்பி வீடியோக்களை போட ஆரம்பித்து விடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











