ஆட்டத்தில் விஜய்யை அடுச்சுக்க முடியாது: பிரபுதேவா
சென்னை: கோலிவுட்டில் சிறந்த டான்ஸர் என்றால் அது விஜய் தான் என்று டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்று பன்முகம் கொண்ட பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டர், ஹீரோவாக இருந்த பிரபுதேவா இயக்குனர் அவதாரம் எடுத்தார். பாலிவுட் பக்கம் சென்ற அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தி திரை உலகம் அவருக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து கொண்டாடவும் செய்கிறது.
பிரபுதேவாவிடம் ஒரு ரீமேக்கை கொடுத்தால் அம்சமாக எடுப்பார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

எங்கேயும் காதல்
கடந்த 2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் காதல் படத்தை அடுத்து பிரபுதேவா மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

மசாலா
பிரபுதேவா தனக்கு மசாலா படங்கள் தான் சரிபட்டு வரும் என்று நினைக்கிறார். அதனால் அதில் தான் கவனம் செலுத்துகிறார்.

விஜய்
கோலிவுட்டில் விஜய்யை பைத்து பிரபுதேவா போக்கிரி படத்தை இயக்கியுள்ளார் என்பது நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. தனது போக்கிரி நாயகன் விஜய் தான் கோலிவுட்டின் சிறந்த டான்ஸர் என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

ரவுடி ராத்தோர்
சிறுத்தை படத்தை பிரபுதேவா இந்தியில் ரவுடி ராத்தோர் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து ஹிட்டாக்கினார். அந்த படத்தில் விஜய் ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ் போட்டதற்கே அக்கி அசந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











