‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடிக்காத விஜய்... நிறைவேறாமல் போன அட்லீயின் ஆசை… ஏன் என்னாச்சு?

சென்னை: ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தை அட்லீ மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாகும் ஜவானில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில், நடைபெற்ற நிலையில், விஜய் நடிப்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வேகமெடுக்கும் ஜவான்

வேகமெடுக்கும் ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில், ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். ஜவான் படத்தின் படபிடிப்பு மும்பை, சென்னை என மாறி மாறி நடைபெற்றது. அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யும் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், ஜவான் படப்பிடிப்புக்கு தளபதி விஜய் சென்று வந்த செய்திகளும் வைரலாகின.

அட்லீ பிறந்தநாள் பார்ட்டியில்

அட்லீ பிறந்தநாள் பார்ட்டியில்

மேலும், கடந்த மாதம் அட்லீயின் பிறந்தநாள் அன்று, அவரது வலது பக்கம் விஜய்யும், இடபக்கம் ஷாருக்கானும் இருக்கும் புகைப்படத்தை அட்லீ வெளியிட்டார் ."என் பிறந்தநாளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். எனக்கு பிடித்த எனது தூண்களுடன் வாழ்வின் சிறந்த பிறந்தநாள் இது" என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்திருந்தார். இதனால், ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என ரசிகர்கள் நம்பி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த தகவல் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

மும்பையில் நடைபெற்று வந்த ஜவான் படத்தின் ஷூட்டிங், கடந்த 30 நாட்களாக சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஜவான் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை ரஜினி சந்தித்ததாக ஷாருக்கான் ட்வீட் செய்திருந்தார். மேலும், நயன்தாரா, அனிருத்துடன் படம் பார்த்தது, பார்ட்டி சென்றது குறித்தும் பதிவிட்டு இருந்தார். அதேபோல், விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடியது, தளபதி விஜய் தனக்கு விருந்து வைத்தது பற்றியும் டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அப்போதும் ஜவான் படத்தில் விஜய் நடிப்பது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

ஏன்... என்னாச்சு?

ஏன்... என்னாச்சு?

இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்ததபோது விஜய் அதில் கலந்துகொள்ளவில்லை. அவர் கேமியோ ரோலில் நடிப்பதாக படக்குழுவும் இதுவரை அறிவிக்கவே இல்லை. விஜய் நடிப்பதாக இருந்திருந்தால் அவர் சென்னையில் நடந்த படப்பிடிப்பிலேயே ஷாருக்கானுடன் இணைந்திருக்கலாம். ஆனால், அதற்கு இனிமேல் வாய்ப்பிலை எனக் கூறப்படுகிறது. இதனால், ஷாருக்கான், விஜய் கூட்டணியை திரையில் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம், ஒருவேளை இனிமேல் விஜய் - ஷாருக்கான் காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X