விஜய்யுடன் போட்டி தான், ஆனால்...? பேனர் பஞ்சாயத்து நடுவே ட்ரெண்டாகும் அஜித்தின் பிளாஷ்பேக் வீடியோ

சென்னை: அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸாகின்றன.
8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் படங்களுடன் போட்டிப் போடுவது குறித்து அஜித் பேசிய பிளாஷ்பேக் வீடியோ வைரலாகி வருகிற்து.

 பொங்கலில் களமிறங்கும் துணிவு - வாரிசு

பொங்கலில் களமிறங்கும் துணிவு - வாரிசு

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முக்கியமாக விஜய்யின் வாரிசு படத்துக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு ரிலீஸாவது எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட, வாரிசு வெளியீட்டு உரிமையை 7 ஸ்கீரின்ஸ் கைப்பற்றியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் விஜய், அஜித் இருவரில் யார் சம்பவம் செய்யவுள்ளார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.

 விஜய்யுடன் போட்டி உண்டு

விஜய்யுடன் போட்டி உண்டு

இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே எந்த படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற பஞ்சாயத்து விஸ்வரூபமெடுத்துள்ளது. அதேபோல், திரையரங்குகள் முன் பேனர் வைப்பதிலும் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே அஜித்தின் பிளாஷ்பேக் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிற்து. அதில், விஜய்யுடன் போட்டி குறித்து அஜித் பேசியுள்ளார். "எல்லா துறைகள் மாதிரி தான் சினிமாவும். கண்டிப்பா எனக்கும் விஜய்க்கு இடையே போட்டி உள்ளது" எனக் கூறியுள்ளார்.

 ஆனால் நிச்சயமாக அப்படி கிடையாது

ஆனால் நிச்சயமாக அப்படி கிடையாது

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியுள்ள அஜித், போட்டி அதிகம் இருந்தாலும் கண்டிப்பா நாங்க எதிரிங்க கிடையாது. எங்களுக்குள்ள இருக்குறது வெறும் போட்டி மட்டும் தான்" என ஆணித்தரமாக பேசுகிறார். அஜித்தின் இந்த பிளாஷ்பேக் வீடியோவை இருதரப்பு ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர். பொங்கல் போட்டியில் அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு படமும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 பேனகர்கள் அகற்றம்

பேனகர்கள் அகற்றம்

முன்னதாக சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த வாரிசு, துணிவு பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. இதனால் ரசிகர்கள் இடயே அதிருப்தி நிலவியது. ஆனால், இரு தினங்களுக்கு முன் சென்னையை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் காரணமாக தான் பேனர்கள் அகற்றப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. அஜித் - விஜய் இருவருமே பொது இடங்களில் நண்பர்களாக பழகி வருகின்றனர். மேலும் நாங்கள் எப்போதுமே நண்பர்கள் தான் எனவும் கூறி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் தான் இந்த உண்மையை உணர்ந்துகொள்ளாமல் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X