கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான்.. நடிகை பூனம் பஜ்வா பளீச்.. அஜித் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என நடிகை பூனம் பஜ்வா ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பளீச்சென பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில் #AskPoonam டிரெண்டாகி வருகிறது. லாக்டவுனால் போரடித்துப் போன நடிகை பூனம் பஜ்வா, தனது ரசிகர்களுக்காக ஒரு கேள்வி பதில் செஷனை நடத்தினார்.

அதில், பூனம் பஜ்வாவிடம் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

மும்பையை சேர்ந்த நடிகை பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பெர்மனன்ட் லைஃப் மற்றும் பாஸ் என்கிற தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர், கன்னட படமான தன்கிகாகி படத்தில் நடித்தார். மீண்டும் சில தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

சேவல்

சேவல்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பூனம் பஜ்வா. அதே ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு திரைப்படம் பூனம் பஜ்வாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

மார்க்கெட் காலி

மார்க்கெட் காலி

பின்னர் மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் பூனம் பஜ்வா. தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் நினைத்த அவருக்கு, இங்கே மார்கெட் சரிந்தது. மற்ற மொழிகளில் அவர் நடித்த படங்களும் சொதப்ப தொடங்கிய நிலையில், சைடு ரோலில் நடிக்கத் தொடங்கினார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் கிளாமர் ரோலில் நடித்து வந்தார்.

ஆஸ்க் பூனம்

ஆஸ்க் பூனம்

இந்நிலையில், இன்று ட்விட்டரில் #AskPoonam எனும் கேள்வி பதில் செஷனை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஓகே ஆனதாகவும் கூறியுள்ளார்.

கோலிவுட்டின் மாஸ்டர்

கோலிவுட்டின் மாஸ்டர்

தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். பூனம் பஜ்வா இப்படி சொன்னதை கேட்டதும், விஜய் ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். பூனம் பஜ்வாவின் தீவிர ரசிகர்கள் நாங்கள், தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அஜித்தை பற்றி

அஜித்தை பற்றி

விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்டால், அஜித் ரசிகர்கள் மட்டும் என்ன சும்மா விடுவார்களா? அவர்களும் தல அஜித்தை பற்றி உங்கள் கருத்து என்ன என பூனம் பஜ்வாவிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, சிறந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.

வலிமைக்காக வெயிட்டிங்

வலிமைக்காக வெயிட்டிங்

நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பவன் கல்யாண், மகேஷ் பாபு, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் குறித்தும் அவரவர் ரசிகர்கள் கேள்விகளை முன் வைக்க அத்தனைக்கு அழகாக பதிலளித்துள்ளார் பூனம் பஜ்வா. யுவன் சங்கர் ராஜா குறித்த கேள்விக்கு, லிட்டில் மேஸ்ட்ரோ என்றும், வலிமை படத்தின் பிஜிஎம்முக்காக வெயிட்டிங் எனவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X