Vijay - நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. வனிதா விஜயகுமார் சொன்னதுக்கு விஜய் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: Vijay (விஜய்) நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என வனிதா விஜயகுமார் கூறியதற்கு விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் குறித்து தெரியவந்திருக்கிறது.

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

Vijay is The Next Super Star Says Vanitha Vijayakumar

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

வசந்தபாலனின் அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சில நாட்கள் முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அதுமட்டுமின்றி பல வருடங்கள் கழித்து வசந்தபாலன் இந்தப் படத்தின் மூலம் தனது மேக்கிங்கில் கம்பேக் கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார்: இந்தச் சூழலில் விஜய் குறித்து வனிதா கொடுத்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சந்திரலேகா ஷூட்டிங் குலுமனாலியில் நடந்தது. நான் அந்த சமயத்தில் பிரபுதேவாவின் தீவிரமான ரசிகை. இதன் காரணமாக எப்போ பார்த்தாலும் விஜய்யிடம் நான் பிரபுதேவா பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பேன். அதனை கேட்க கேட்க அவருக்கு காதில் எல்லாம் புகை வரும்.

Vijay is The Next Super Star Says Vanitha Vijayakumar

நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார்: அதுமட்டுமின்றி கழுத்தில் கொட்டையும், நெத்தியில் பட்டையும் இருக்குற பையனைத்தான் உங்களுக்கெல்லாம் பிடிக்கும். என்னை மாதிரி ஆளெல்லாம் பிடிக்குமா என கேட்பார். அப்போது நான் நீ வேணா பாரு நீதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றேன். அதற்கு அவரோ ஹே சும்மா சொல்லாத என்னை பிடிக்கும்ங்றதுக்காத்தான் இப்டி சொல்ற' என கூறினார் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்தார் வனிதா.

அடுத்த சூப்பர் ஸ்டார்: கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.அதாவது ரஜினிக்கான மவுசு குறைந்துவிட்டது; மாறாக வியாபாரத்தில் விஜய் நம்பர் 1ஆக இருப்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கூற அதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுப்பது என நந்தப் பஞ்சாயத்து களைகட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X