விஜய் ச்சோ ஸ்வீட், சிறந்த டான்ஸர்: இங்கிலாந்து மாடல் அழகி ஸ்கார்லட் புகழாரம்
சென்னை: ஜில்லா படத்தில் ஒரு பாடலுக்கு விஜய் இங்கிலாந்து மாடல் ஸ்கார்லட் மற்றும் டான்ஸர் ஹேஸல் ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளாராம்.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக வருகிறது. படம் பற்றி அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்கார்லட்
படத்தில் வரும் ஒரு பாடலுக்கு விஜய் இங்கிலாந்து மாடல் ஸ்கார்லட் மற்றும் டான்ஸர் ஹேசலுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

ராஜு சுந்தரம்
பிரமாண்ட செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாட்டுக்கு நடனம் அமைத்தவர் ராஜு சுந்தரம். ராஜு சுந்தரம் விஜய்க்கு நடனம் அமைத்த பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

ஸ்வீட்டஸ்ட் விஜய்
விஜய்யுடன் ஆடி முடித்த பிறகு ஸ்கார்லட் ட்விட்டரில் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, விஜய் ஒரு சிறந்த டான்ஸர். விஜய் மகிவும் இனிமையான நபர். அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தது
ஜில்லா படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் என்று ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











