twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவே அரசியல் கட்சி தொடங்கினாலும்.. நேர்த்தியாக சமாளித்து.. முடிவில் தெளிவாக இருந்த நடிகர் விஜய்!

    |

    சென்னை: அப்பாவே அரசியல் கட்சி தொடங்கிய போதும் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளார் நடிகர் விஜய்.

    Recommended Video

    தளபதி விஜய் 2021 தேர்தலில் போட்டியிடுகிறாரா? | கமலுடன் கூட்டணி?

    நடிகர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர துடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. திரைத்துறையில் சம்பந்தப்பட்ட பலர் ஆட்சி அதிகார பீடத்தில் கோலோச்சியிருக்கிறார்கள்.

    அந்தவகையில் எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி, விஜயகாந்த், நவரச நாயகன் நடிகர் கார்த்தி, டி.ராஜேந்தர் என பலரும் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளார்கள். இன்னும் பல நடிகர் நடிகைகள் எம்பிக்களாகவும் எம்எல்ஏக்களாவும் உள்ளனர்.

    தீவிர அரசியல்

    தீவிர அரசியல்

    அந்த வகையில் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியாளர்களுக்கு குடைச்சலை கொடுத்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக இருந்தபோதும் அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

    எப்போது கட்சி தொடங்குவார்? அதேநேரத்தில் சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார்? எப்போது அரசியலுக்கு வருவார்? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    எப்போது கட்சி தொடங்குவார்? அதேநேரத்தில் சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார்? எப்போது அரசியலுக்கு வருவார்? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    அதேநேரத்தில் சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார்? எப்போது அரசியலுக்கு வருவார்? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    தென்பட்ட அறிகுறிகள்

    தென்பட்ட அறிகுறிகள்

    ரஜினியின் ரசிகர்களை தொடர்ந்து விஜயின் ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் நடிகர் விஜயின் சமீப கால படங்களிலும் அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவரது ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது.

    தலைத்தூக்கிய பிரச்சனைகள்

    தலைத்தூக்கிய பிரச்சனைகள்

    தொடர்ந்து நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட சில அழுத்தங்கள், வருமான வரித்துறை சோதனை, படப்பிடிப்பு தளத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து பிரச்சனைகள் தலைத் தூக்கின. இதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லப்பட்டு வந்தது.

    பரபரப்பான அரசியல் களம்

    பரபரப்பான அரசியல் களம்

    இந்த நிலையில்தான் நேற்று பிற்பகல் முதலே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார். தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக அரசியல் களமும் தமிழ் சினிமாவும் பரபரப்புக்குள்ளானது.

    எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம்

    எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம்

    அப்போது இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விஜயின் அப்பா, அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பது உண்மை, ஆனால் அதை செய்தது விஜய் அல்ல நான்தான் என்றார். அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று தெளிவாக கூறினார்.

    விழிபிதுங்க செய்த விஜய்

    விழிபிதுங்க செய்த விஜய்

    இருந்தபோதும் இந்த விஷயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்பா எஸ்ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பித்ததாக கூறிய சில நிமிடங்களிலேயே அதிரடி அறிக்கை ஒன்று வெளியிட்டு மொத்த பேரையும் விழிபிதுங்க செய்தார் விஜய்.

    எந்த தொடர்பும் இல்லை

    எந்த தொடர்பும் இல்லை

    அதாவது, என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடா்பும் இல்லை. இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

    ரசிகர்கள் இணைய வேண்டாம்

    ரசிகர்கள் இணைய வேண்டாம்

    மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    விஜய் எச்சரிக்கை

    விஜய் எச்சரிக்கை

    மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்தார் நடிகர் விஜய்.

    மாஸ் ஹீரோ

    மாஸ் ஹீரோ

    கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மாஸ் ஹீரோவான விஜய், தனது தந்தை கட்சி தொடங்கியது தனக்கு தெரியாது என்று கூறியதும், தனது ரசிகர்கள் யாரும் தங்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நிலைப்பாட்டில் உறுதி

    நிலைப்பாட்டில் உறுதி

    எப்படி அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்கும் என்றும் கேள்விகள் எழுந்தன. சிலர் தனது அப்பாவை வைத்து ஆழம் பார்க்கிறாரா விஜய் என்றும் விமர்சிக்க தொடங்கினர். எது எப்படியோ விஜயின் அறிக்கை அரசியல் விஷயத்தில் அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறாரோ அதில் உறுதியாக உள்ளார் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறது.

    ஒருபடி உயர்ந்துள்ளார்..

    ஒருபடி உயர்ந்துள்ளார்..

    சிலர் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என அரசியல் களத்தில் கால் வைப்பது குறித்து ரொம்பவே யோசித்து வரும் நிலையில், நடிகர் விஜய் அப்பாவே அரசியல் கட்சி தொடங்கினாலும் என்னுடைய நிலைப்பாடு இதுதான் என தடாலடி அறிக்கை வெளியிட்டு நேர்த்தியாக சமாளித்துள்ளார். அவரது இந்த தெளிவு நடிகர் விஜயை அரசியல் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஒருபடி உயர்த்தியுள்ளது.

    English summary
    Fans praising Actor Vijay's clarity in political issue. Fans and Political reviewers says Vijay is Very clear about his Political arrival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X