விஜய் இஸ் வெயிட்டிங்: கோரிக்கையை ஏற்பாரா இயக்குனர் ஷங்கர்?
சென்னை: மீண்டும் நாம் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று இளைய தளபதி விஜய் இயக்குனர் ஷங்கரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் இளைய தளபதி விஜய், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடந்த நிகழ்ச்சியில் விஜய் பேசினார்.
அப்போது அவர் ஷங்கரிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

மீண்டும்
மீண்டும் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஐ ஆம் வெயிட்டிங் என்று விஜய் ஷங்கரிடம் தெரிவித்தார்.

நண்பன்
ஷங்கர் இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில் விஜய்யை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

முதல்வன்
முதல்வன் படத்தில் நடிக்குமாறு ஷங்கர் ரஜினியை கேட்க அவர் தயங்கியுள்ளார். உடனே அவர் விஜய்யை கேட்க அவரும் மறுத்துவிட்டார். அதன் பிறகே அந்த படத்தில் அர்ஜுன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன்
ஷங்கரின் படங்களில் விஜய்க்கு பிடித்த படம் உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த இந்தியன் ஆகும்.


Click it and Unblock the Notifications