Jana Nayagan: தளபதியே பாடிய தாலாட்டு.. நண்பிகளுக்கு இனி இதுதான் ஸ்லீப்பிங் பில்ஸ்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் மூன்றாவது பாடலான கண்ணே மணியே பாடலின் ப்ரோமோ படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாடலை விஜயே பாடி உள்ளதால் பாடலின் ப்ரோமோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், பாடல் செம மெலடியாக தாலாட்டு பாடலாக உள்ளதால் பெண் ரசிகைகளுக்கு இந்த பாடல் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான பாடலாக உருப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாடல் நாளை அதாவது டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி 04 நிமிடங்களுக்கு வெளியாகவுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தளபதி விஜயின் கடைசி படம் ஜன நாயகன் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இது தெலுங்கு படமான பகவந்த கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றாலும், விஜய்க்கு ஏற்றவாரு படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் காட்சி வடிவமைக்கப்ப்ட்டுள்ளதாகவும், அந்த காட்சியில் தான் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vijay Jana Nayagan 3rd Single Chella Magale Promo Attracts Girls Fans Full Song Will Out Tomorrow
Photo Credit:

காவல் அதிகாரி: தளபதி போலீஸாக நடித்த படங்களே இரண்டு படங்கள் தான். ஒன்று போக்கிரி. இது அவரது கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றியை எட்டியப் படம். அதேபோல் ஜில்லா, இந்த படம் அஜித்தின் வீரம் படத்துடன் நேருக்கு நேர் மோதியது. இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றியை எட்டியது. இன்னும் சொல்லப்போனால் வீரம் படம் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

ரசிகர்கள் ஆவல்: இந்நிலையில் இவரது கடைசி படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதால், ரசிகர்கள் தளபதியை காக்கி யூனிஃபார்மில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இரண்டு பாட்லகளில் ஒரு பாடலை தளபதி பாடி இருந்தார். இதில் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலையும் அவரே பாடி உள்ளதால் ரசிகர்கள் ஓவர் குஷியாக உள்ளனர். நாளை மறுநாள் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X