Jana Nayagan: ஸ்தம்பித்த மலேசியா.. வரிசை கட்டி நிற்கும் ஆயிரம் கார்கள்.. ஆல் ஏரியாவிலும் தளபதி கில்லி

மலேசியா: நேற்று மதியத்தில் இருந்து இணையத்துக்குள் நுழைந்தாலே விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டுகள் தான். ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வமாக இருக்கின்றனர். இதனாலே இணையத்தில் ஜன நாயகன் தொடர்பான அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்கள் பல நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு படை எடுத்தனர். சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள்.

Vijay Jana Nayagan Audio Luanch Total Malaysia Faced Big Traffic Jam - Fan Release Video

குவிந்த ரசிகர்கள்: இப்படி இருக்கும்போது, மலேசியாவில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது என்று தகவல் வெளியானது, அஜித் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் மலேசியாவில் அஜித் மற்றும் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் செல்வாக்கு அதிகம், விஜய்க்கு அந்த அளவுக்கு இல்லை என்று எல்லாம் இணையத்தில் பதிவிட்டு வந்தார்கள். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் ரஜினி மலேசியா சென்ற போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் மலேசியாவின் பிரதமரே நேரடியாக வரவேற்ற வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்தனர். அதேபோல் நடிகர் அஜித்தின் பில்லா பட காட்சிகள், குட் பேட் அக்லி பட காட்சிகளைப் பகிர்ந்து அலப்பறை செய்து வந்தார்கள்.

டிராஃபிக்: இப்படி இருக்கும்போது, இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் தன்னால் நிகழ்ச்சி நடக்கும் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்திற்கு செல்ல முடியவில்லை. சுமார் ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் சுற்றளவில் மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாடகை காரில் வந்த நாங்கள் ஒரு கட்டத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டோம். சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக நடந்து வந்துவிட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் குறைந்ததாக தெரியவில்லை. கூகுள் மேப்பில் இந்த போக்குவரத்து நெரிசலை தெளிவாகக் காட்டுகிறது. மொத்த மலேசியாவும் ஸ்தம்பித்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். இந்த ரசிகர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Vijay Jana Nayagan Audio Luanch Total Malaysia Faced Big Traffic Jam - Fan Release Video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X