நடுக்கடலில் கைவிடப்பட்ட படகா ஜன நாயகன்?.. லேட்டஸ்ட் அப்டேட் என்னனு தெரியுமா? ரசிகர்களே இதை கவனிங்க
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி 9ஆம் தேதியே வெளியாக திட்டமிடப்பட்ட படம் ஜனநாயகன். ஆனால் சென்சார் சான்றிதழ் வாங்காமல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது மட்டும் இல்லாமல், சென்சார் வழங்கப்படவில்லை என்று வழக்கும் தொடுத்தார்கள். அதன் பின்னர் நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கையில் படம் எப்போது தான் வெளியாகும் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதாவது சென்சார் குறித்த தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்திற்கான சென்சார் வழக்கை ஜன நாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. இது மட்டும் இல்லாமல் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவும் படக்குழு தயாராகி விட்டதாகவும். அதற்காக படக்குழு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்னதான் நடக்குது: இப்படி இருக்கையில் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்ப்பதற்கே இன்னும் நேரம் ஒதுக்கவில்லையாம். அதாவது படத்தை இந்த வார இறுதியான இன்றும் நாளையும் ரிவைசிங் கமிட்டி தரப்பில் பார்த்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களின் ரிவைசிங் பட்டியலிலேயே ஜன நாயகன் படம் இன்னும் இடம் பெறவில்லையாம். இது மட்டும் இல்லாமல், படத்தை இந்த தேதியில் தான் பார்க்க திட்டமிட்டுள்ளோம் என்று படக்குழுவினருக்கும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லையாம். இதனால் மொத்த படக்குழுவும் செம அப்செட்டில் இருக்கிறதாம்.

எப்போது ரிலீஸ்: படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வருகிறதாம். இந்த தகவல் தற்போது திரையுலகில் வேகமாக பரவி வருவதால் பிப்ரவரி மாதத்தில் மீதம் உள்ள வெள்ளிக்கிழமைகளில் படத்தை ரிலீஸ் செய்ய பரபரப்பாக தயார் ஆகி வருகிறார்களாம். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான படமான தாய் கிழவி படம் ரிலீஸ்க்கு தயாரான நிலையில், மற்ற சின்ன படெஜ்ட் படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம். அதே நேரத்தில் விஜய் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக வரும் 27ஆம் தேதி அவரது தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் தாணு என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications