Jana Nayagan: ஜன நாயகனா இல்லை அந்த நாயகனா? H வினோத் பார்த்த வேலை.. பிரபலம் கேட்ட கேள்வி

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் இப்படம் குறித்து பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறு பக்கம் கொஞ்சம் அப்செட்டும் ஆக்கியுள்ளது.

ஜன நாயகன் படம் தளபதி விஜய்யின் 69 வது படம். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் படத்தில் பலர் நடிக்கிறார்கள். படத்தை முதலில் 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழுவினர், அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்கு ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர்.

Vijay Jana Nayagan Have 10 Fights Bismi Ask Who is The Director Of Movie H Vinoth Or Analarasu
Photo Credit:

கடைசி படம்: விஜய் இந்த படத்துடன் தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அரசியலில் காலடி எடுத்து வைப்பதால் இந்த படத்தின் கதைக்களம் அரசியலை மையமாக கொண்டதாக இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் ஆன பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தில் அரசியல் என்பது எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இயக்குநர் ஹெச். வினோத் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு என்பது மட்டும் இப்போதும் உள்ளது.

10 சண்டைக் காட்சிகள்: படம் ஜனவரி மாதம் வெளியாவதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எப்போதும் உள்ளது. இந்நிலையில் படம் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " இந்த படத்திற்கு நடிகர் விஜய்யிடம் 110 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளார்கள். அதேபோல் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவிடம் 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளார்கள். அதற்கு காரணம் படத்தில் மொத்தம் 10 சண்டைக் காட்சிகள் உள்ளதாம். இந்த படத்திற்கு ஹெச். வினோத் இயக்குநரா? இல்லை அனல் அரசு இயக்குநரா? என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்று கூறினார். இதைக் கேட்ட வலைப்பேச்சு சக்திவேல், இந்த படம் ஜன நாயகனா? இல்லை ஸ்டண்ட் நாயகனா? என்று கேள்வி எழுப்பினார்.

Vijay Jana Nayagan Have 10 Fights Bismi Ask Who is The Director Of Movie H Vinoth Or Analarasu
Photo Credit:

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: விஜய்யின் கடைசி படத்தில் 10 சண்டைக் காட்சிகள் என்று கேள்விப்பட்டதும் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். அதேபோல் படத்தை அரசியல் படம் என்று நம்பிக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X