ஜன நாயகன் ரிலீஸ் தேதி மட்டும் அதுவா இருந்தா? அஜித் ரசிகர்கள் போட்டிக்கு நிற்பாங்களே? என்ன நடக்குமோ?
சென்னை: என்னதான் ஜன நாயகனுக்கு சென்சார் கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டே இருந்தாலும், படக்குழு தெளிவாக ஒரு விஷயத்தை உறுதி படுத்தி விட்டது, அது ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீஸ் இல்லை என்பதுதான் அது. அப்படி இருக்கையில், இனி ஜன நாயகன் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து யோசிக்க வேண்டியது சரியானதாக இருக்கும்.
ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், படத்திற்கு அடுத்து ரிலீஸ் தேதியாக ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை படத்தை சித்திரை 1ஆம் தேதி அதாவது, ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டால், அது பெரிய அளவில் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். தேர்தல், பொதுத் தேர்வுகள், ஐபிஎல் என மக்கள் வழக்கத்தை காட்டிலும் ரொம்பவுமே பிசியாக இருக்க கூடிய கால கட்டம். எனவே படத்தை இந்த பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்யவே பெரும்பாலும் முயற்சிப்பார்கள் என்ற பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது.

சரி, அதன் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை உள்ளதால் படத்திற்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் என்பது இருக்கும். அதே நேரத்தில் பராசக்தி படத்தை 10ஆம் தேதி ரிலீஸ் செய்யும் போது, குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களில் ஜன நாயகனுக்கு ஸ்கிரீன்கள் கிடைக்காமல் போகலாம்.
தியேட்டர்கள் ஒதுக்கீடு: இதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், பராசக்தி தியேட்டர்கள் அப்படியே மங்காத்தா ரீ ரிலீஸ்க்கு கைமாற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது ஜன நாயகன் முதல் 9 நாட்கள் பராசக்தியுடன் மோதவேண்டிய சூழலும் அதன் பின்னர் அஜித்தின் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் உடன் மோத வேண்டிய சூழல் ஏற்படும்.

மங்காத்தா ரீ ரிலீஸ்: மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸைப் பொறுத்தவரையில் அதை வழக்கமான படங்களின் ரீ ரிலீஸ் போல எடுத்துக் கொள்வது என்பது கொஞ்சம் சந்தேகத்திற்குரியது தான். அஜித் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆவலைப் பார்த்தால், புது படத்தின் ரிலீஸ்க்கு கொடுக்கும் ஓபனிங்கைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இதுவும் ஜன நாயகன் படத்திற்கு ஒரு சவாலானதாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.
அஜித் ரசிகர்கள்: ஜனவரி 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்தால் ஜன நாயகன் படத்திற்கு இருக்க கூடிய கள சவால்களாக இவை உள்ளது. என்னதான் விஜய் தனது படங்களிலும் மேடைகளிலும் அஜித் குறித்து பேசிக் கொண்டே வந்தாலும், அவை அஜித் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது என்பது கேள்விக் குறி. அது மட்டும் இல்லாமல், மங்காத்தா படத்தை வரவேற்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications