Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன் சென்சார் பிரச்னை ஓவர்?.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில்; அதற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு இப்போது சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் தெரியவந்திருக்கிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன்; பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. இருந்தாலும் அப்பட்டமாக அந்தப் படத்தை ரீமேக்கியிருக்கமாட்டார்கள் என்பதும்; வினோத் கண்டிப்பாக தனது ஸ்டைலில் படத்தை உருவாக்கியிருப்பார் என்பதும் ரசிகர்களின் ஆழமான நம்பிக்கை. ட்ரெய்லரில்கூட பகவந்த் கேசரியில் இல்லாத சில விஷயங்களை பார்க்க முடிந்தது என்பது குறிப்பிட்த்தக்கது.

ஜன நாயகன் ரிலீஸ் எப்போ?: இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இதனை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு முழு வீச்சில் தயாராகிவருகிறார்கள் தளபதி ரசிகர்கள். போட்டிக்கு பராசக்தி வந்தாலும்; கண்டிப்பாக அதையும் தாண்டி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அனைவரிடமும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெறும் என அடித்து கூறுகிறார்கள் பலரும்.

Vijay Jana Nayagan Movie Got U A Certificate After Revising Committee Running Time also Revealed
Photo Credit:

தமிழ்நாட்டில் எப்போது முதல் காட்சி: கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லாம் படத்தின் முதல் காட்சி ஆறு மணிக்கு திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அந்த மாநிலங்களில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கிவிட்டதாகவும்; இதுவரை புக்கிங்கில் படம் பட்டாசாக வெடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் காட்சிக்கு அரசு காலை ஒன்பது மணிக்குத்தான் அனுமதி தரும் என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்தான். ஆனாலும் பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்து சென்று பார்க்க முடிவெடுத்துவிட்டார்கள்.

சென்சார் பிரச்னை: இது ஒருபக்கம் இருக்க ரிலீஸிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்; ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்துவந்தது. விஜய் அரசியல் பிரவேசம் செய்திருப்பதால் வேண்டுமென்றே பாஜக தரப்புதான் படத்துக்கு சென்சார் கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவருவதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பூ.

ரூட் க்ளியர்?: இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு இருந்த சென்சார் பிரச்னை தீர்ந்துவிட்டது என்றும் அதன்படி படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் ரன்னிங் மூன்று மணி நேரம் மூன்று நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X