Jana Nayagan Update: தளபதிக்கு போலீஸ் கெட்டப்.. பிரியாமணிக்கு என்ன கெட்டப்.. இதோ புது அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தனது சினிமா வாழ்க்கையில் கடைசி படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். அவர் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினை வழி நடத்த வேண்டி உள்ளதால், முழுக்க முழுக்க சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் தளபதி விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகை பிரியாமணி தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. கே.வி. என் புரெடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ரூபாய் 225 கோடிகள் முதல் ரூபாய் 275 கோடிகள் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் விஜய்யின் அரசியல் அத்தியாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு, தனது கட்சிப் பணி என விஜய் இரண்டையும் ஒரு சேர கையாண்டு வருகிறார்.

வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார் என்பதால், அன்றைய தினத்தில் படத்தின் அப்டேட் ஏதாவது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தில் உலகப் புகழ் பெற்ற ராப் பாடகர் ஹனுமன்கைண்ட் பாடியுள்ளார். இந்த தகவலை அவரே பகிர்ந்து கொண்டார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தை முதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள். ஆனால் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்தால், படத்தின் தாக்கம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிலீஸ் தேதியை 2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளார்கள்.

Vijay Jana Nayagan Movie Update Gives Actress Priyamani

லீக்கான காட்சிகள்: இப்படியான நிலையில், கடந்த வாரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து காட்சி ஒன்று லீக் ஆனது. இணையத்தில் பரவிய அதில் விஜய் போலீஸ் வேடத்தில் இருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. ஆனால் இது தொடர்பாக படக்குழு எதுவும் கூறவில்லை. ஆனாலும் இது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. கடைசியாக படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் சுமார் இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்றது. அங்கு நடிகர் விஜய்யின் காட்சிகளும் படமாக்கப்பட்டது.

பிரியா மணி: ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஹு, பிரியாமணி என பல முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் பூஜா கெஹ்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மமிதா பைஜு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகை பிரியாமணி தனது கதாபாத்திரம் குறித்து மலையாள சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Vijay Jana Nayagan Movie Update Gives Actress Priyamani

முக்கியமான கதாபாத்திரம்: அந்த பேட்டியில், " நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடன் ஜன நாயகன் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எனது காட்சிகள் படமாக்கப்படவில்லை. விரைவில் எனது காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. படத்தில் எனது கதாபாத்திரமும் முக்கியமான கதாபாத்திரம்தான் என்று கூறியுள்ளார். பிரியாமணி அளித்துள்ள இந்த பேட்டியில் ஜன நாயகன் படம் குறித்த அப்டேட்டைக் கூறியிள்ளதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X