லோக்கல் பாலிடிக்ஸை விடுங்க.. விஜயின் ஜனநாயகன் பிசினஸ் வெற்றிக்கு இத்தனை சிக்கல் வருதே? என்ன காரணம்?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்கு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது ஜன நாயகன் படத்தின் பிசினஸ் வெற்றிக்கு பல சிக்கல்கள் உருவாகி உள்ளது. அவை என்னென்ன மற்றும் காரணம் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் ரூபாய் 235 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் இல்லாமல், மற்ற நடிகர்கள் நடிகைகள், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என மொத்த படக்குழுவினர் சம்பளம், படத்தின் தயாரிப்பு செலவு உள்ளிட்டவற்றை தோராயமாக கணக்கிட்டால் கூட, படத்தின் பட்ஜெட் ரூபாய் 325 முதல் ரூபாய் 350 கோடிகள் வரை தோராயமாக வருகிறது என்று கணக்கிட்டுக் கொள்வோம்.

ஆனால், படம் அவ்வளவு பிசினஸ் செய்து தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்குமா என்றால் அது, தலைவலியான கேள்வியாகத்தான் உள்ளது. அதாவது, படம் ஓடிடி பிசினஸில் ரூபாய் 121 கோடிகள் வசூலித்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் ரூபாய் 105 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் வெளிநாட்டு, வெளிமாநில தியேட்டரிக்கல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்டவற்றி பிசினஸை கணக்கில் கொண்டால், மொத்த பிசினஸ் வேல்யூ என்பது எப்படியும் படத்தின் தயாரிப்பு செலவை ஈடுகட்டிவிடும்.
ஆனால் தியேட்டரிக்கல் ரைட்ஸில் படக்குழு செய்துள்ள பிசினஸ்க்கு வசூல் வருமா என்றால் அது கொஞ்சம் கேள்விக்குறிதான். நார்மலாக விஜய் படம் என்றால் எப்படியும் வசூல் மழை பொழிந்து விடும். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் காலகட்டம் தியேட்டரிக்கல் பிசினஸ்க்கு மிகவும் சிக்கலான காலகட்டமாக மாறி உள்ளது. இதற்கு பொத்தாம் பொதுவாக பராசக்தி படம் வெளியாகிறது. படத்தை ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் செய்கிறார்கள் அதனால், ஜன நாயகனுக்கு பெருமளவில் தியேட்டர் கிடைக்காது என்று கூறப்படுகிற ஊகத் தகவல்களை பொருட்டாக எடுத்துக் கொண்டாலும், இது இல்லாமலும் சில காரணங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பராசக்தி, ராஜா சாப்: அதாவது, தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படமான ராஜா சாப் படமும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அப்படி இருக்கும்போது, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ஜன நாயகனுக்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைப்பது சிரமம் தான். மேலும் விஜய்க்கு வட இந்தியாவில் பெரிய அளவில் பிசினஸ் கை கொடுத்தது இல்லை. ஏதோ சில படங்களுக்கு மட்டுமே கிளிக் ஆகியுள்ளது. அதன் அடிப்படையில் வட இந்தியா பிசினஸையும் ஜன நாயகன் படக்குழு எதிர்பார்க்க முடியாது. ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தாக்கம் என்பது வெளிநாடுகளிலும் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இதைக் கடந்து, மலேசியா, இலங்கை, கனடா போன்ற நாடுகளில் ஜன நாயகனுக்கு பிசினஸ் எதிர்ப்பார்ப்பை ரீச் செய்யும் அளவுக்கு இருக்க வாய்ப்புகள் உள்ளது.
தமிழ்நாடு தான்:ஆனால் இவை அனைத்தையும் கடந்து தமிழ்நாடுதான் விஜய்க்கு பெரிய அளவில் வசூலை அள்ளிக் கொடுக்கும் கிரவுண்ட். இதைக் கடந்து கேரளா அடுத்த இடத்தில் உள்ளது. லாபத்தை ஈட்ட முடியுமா என்ற சந்தேகத்தில் தான் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்ற பேச்சு உள்ளது. இதை எல்லாம் ஈடுகட்ட தான் சுமார் 80 கோடிகள் டார்கெட் வைத்து இசை வெளியீட்டு விழாவை பெரிய கான்செர்ட்டாக படக்குழு நடத்த பிளான் செய்து, அதற்கான வேலைகளை மலேசியாவில் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

நெருக்கடி: தன்னை நம்பி படம் போடும் தயாரிப்பாளருக்கு ஏன் விஜய் இவ்வளவு நெருக்கடிகளை உருவாக்குகிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. படத்தின் பிசினஸ் வெற்றியில் பங்கு பெற்றுக் கொண்டு சம்பளத்தை குறைத்தால் அது தயாரிப்பாளர்களை மட்டும் இல்லாமல், மொத்த சினிமா உலகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இனி விஜய் அதை செயல்படுத்த முடியாது. ஆனால் முன்னணி நடிகர்கள் இதை பின்பற்றினால் அது திரை உலகிற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஒரு கதையை தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் சம்பளத்தை குறைத்து வாங்கிக் கொள்ளவும் தயாராகும் மனநிலை எல்லாம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு வரும் காலம் எல்லாம் இன்னும் பல தசாப்தங்களுக்கு அப்பால் உள்ளது.


Click it and Unblock the Notifications











