ஜனநாயகன் டிக்கெட் 1,500 ரூபாயா?.. விலை எக்குத்தப்பா இருக்கே?.. தூய சக்தி இப்படி செய்யலாமானு விமர்சனம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை ஆறு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்குத்தான் முதல் காட்சி என்று தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க ப்ரீ புக்கிங்கில் படம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசியிருக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வினோத், ' இது முழு ரீமேக் படமா இல்லை கொஞ்சம் ரீமேக் படமா என்று கேட்கிறார்கள். ஐயா இது நூறு சதவீதம் தளபதி படம்' என கூறியிருந்தார்.
நாளை ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததை அடுத்து; இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. புத்தாண்டையொட்டி நேற்று படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி படத்தின் ட்ரெய்லரானது ஜனவரி மூன்றாம் தேதி மாலை வெளியாகும் என அறிவித்திருக்கிறது. எனவே ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். முக்கியமாக இது பகவந்த் கேசரி ரீமேக்கா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும் என்பதால் நிம்மதியும் அடைந்திருக்கிறார்கள்.

ப்ரீ பிஸ்னெஸ் சூப்பர்: படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் இதுவரை பட்டையை கிளப்பியிருப்பதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும்; ஆடியோ உரிமை 35 கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாகவும்; மொத்தம் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் 250 கோடி ரூபாய்வரை நடந்திருப்பதாகவும் தெரிகிறது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
செய்யாறு பாலு பேட்டி: அதேபோல் படத்தின் ப்ரீ புக்கிங்கும் 20 கோடி ரூபாய்வரை நடந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசுகையில், "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஜனநாயகன் படத்தை ஆறு மணிக்கு திரையிடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்குத்தான். எனவே அங்கே எல்லோரும் சென்று பார்க்க தயாராகியிருக்கிறார்கள். கேரளா, பெங்களூருவில் ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது.
ஒரு டிக்கெட் 1,500 ரூபாயா?: கேரளாவில் எல்லா ஸ்க்ரீன்களிலும் புக்கிங் தொடங்கவில்லை. கொஞ்ச ஸ்க்ரீனுக்குத்தான் தொடங்கியிருந்தாலும்; அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அந்த மாநிலங்களில் டிக்கெட் கவுன்ட்டர்களிலேயே டிக்கெட் விலை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய்வரை சொல்கிறார்கள். இதை பார்த்து பலரும் தூய சக்தி விஜய் இப்படி செய்யலாமா என்று விமர்சிக்கிறார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











