Jana Nayagan: சென்னை டூ செங்கோட்டை.. பறக்கும் ஜன நாயகன்.. ரசிகர்களே தயாரா.. வேற லெவல் ஏற்பாடு.. வீடியோ பாருங்க

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நடைபெற்று வந்தாலும், கடந்த வாரத்தில் இருந்து சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. ரசிகர்கள் படத்தின் டிரைலருக்கு ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது படத்தின் புரோமோசனை இன்னும் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ள செய்துள்ள விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவான கடைசி படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக விஜய் ரூபாய் 235 கோடிகள் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும்போது, படத்தை வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் படத்தின் புரோமோசன் பெரிய அளவில் நிகழ்ச்சிக்கு படக்குழு ஏற்பாடு செய்யும் என்று ஒரு பேச்சும், அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஒரு பேச்சும் ஓடிக்கொண்டு உள்ளது.

Vijay Jana Nayagan Promotion Movie Giant Posters Pasted On Intercity express Video Goes Trending
Photo Credit:

பிரமாண்ட விளமபரம்: இப்படி இருக்கும்போது, படத்தின் பிரமாண்டமான புரோமோஷன்களில் ஒன்றாக சென்னையில் இருந்து, விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, தென்காசி மார்க்கமாக செங்கோட்டைக்குச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஜன நாயகன் படத்தின் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது, இது போன்ற புரோமோசன்கள் நடைபெறுவது சாதரண விஷயம் தான் என்றாலும், ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: ஏற்கனவே விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுகிறார் என்று வருத்ததில் இருக்கும் ரசிகர்கள், இந்த விளம்பரத்தைப் பார்த்தும், இனிமேல் தளபதிக்கு இது போன்ற விளம்பரங்கள் வராது தானே என்று எமோஷனலாகி வருகிறார்கள். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை, தினமும் சென்னை முதல் செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இந்த அதிவேக ரயிலில் ஜன நாயகன் படத்தின் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பான வீடியோவை கே.வி.என். புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X