Vijay Reel Daughter Video: நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட விஜயின் ரீல் மகள்.. செம கியூட்டா இருக்கேப்பா!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். இது விஜயின் கடைசி படம். இந்த படத்திற்கு மட்டும் விஜய் ரூபாய் 235 கோடிகள் சம்பளமாக பெற்றார் என்று எல்லாம் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது, மலேசியாவில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜயின் மகளாக நடித்துள்ள லித்தன்யா சிவபாலன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், மேடையில் பேசத் தவறிய சிலவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார் லித்தன்யா. அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில், " முதல் நாளில் இருந்தே என்னுடன் பயணிக்கும் எனது ரசிகர்கள். அவர்கள் ஏதோ, ஒன்று இரண்டு நாட்கள் எனக்காக நிற்கவில்லை, கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றுள்ளார்கள். அதனால் தான் நான் இன்றைக்கு இங்கு நிற்கிறேன். எனக்காக 33 ஆண்டுகளாக அவர்கள் நின்றார்கள், அடுத்த 30, 33 ஆண்டுகளுக்கு நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்.
நன்றிக்கடன்:எனக்கு ஒன்னு என்றால் ரசிகர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி சொல்லிட்டு போறவன் கிடையாது, நன்றிக்கடன் தீர்த்துட்டு போறவன்" என்று பேசினார். விஜய் பேசியது, நடனம் ஆடியது, பாடல்கள் பாடியது என அனைத்தும் ரசிகர்கள் அனைவருக்கும் எமோஷனலான தருணமாக இருந்தது.

விஜய் மாமா: இப்படி இருக்கும்போது, படத்தில் விஜய்க்கு மகளாக நடித்துள்ள லித்தன்யா பேசுகையில், " விஜய் மாமாவுக்கு நன்றி. அவரது சிரிப்பு செம கியூட்டாக இருந்தது. மமிதா பைஜு மேடம்க்கு நன்றி. விஜய் மாமா நீங்கள் உங்கள் படம் வெளியான பின்னர் உங்களது நண்பர்களை காரில் அழைத்துச் செல்வீர்கள் அல்லவா? அது போல என்னையும் அழைத்துச் செல்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். உடனே விஜய் சரி என்று கை அசைத்தார் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
க்யூட் வீடியோ: இப்படி இருக்கும்போது, லித்தன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், " கே.வின்.என் நிறுவனத்திற்கு நன்றி. வாய்ப்பு கொடுத்த ஹெச். வினோத் சாருக்கு நன்றி. என்னை நன்றாக பார்த்துக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு நன்றி. விஜய் மாமாவுடன் மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த, அழகான பாடல்களுக்கு நன்றி அனிருத் சார். விஜய் மாமாவுக்கு நன்றி. உங்களுடன் நடித்தது, உங்களுடன் டான்ஸ் ஆடியது என எல்லாவற்றையும் என்னால் மறக்க முடியாது. உங்களது சிரிப்பு செம க்யூட்டாக உள்ளது. இந்த பிரபஞ்சத்திடம் எது கேட்டாலும் நடக்கும் என்று சொல்லுவார்கள். நீங்கள் எப்போதும் எங்கள் தளபதியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். லவ் யூ விஜய் மாமா" என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











