விஜய்யின் ஜனநாயகன்.. சாட்டிலைட் உரிமம் எந்த சேனலுக்கு தெரியுமா?.. கோடியை கொட்டிருக்காங்களே ப்பா
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கிறது. இதனை அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட் உரிமம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
விஜய்யின் 69ஆவது படமாக உருவாகியிருக்கிறது ஜனநாயகன் படம். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்றும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. இனிமேல் விஜய்யை திரையில் பார்க்கவே முடியாதா என்று ரசிகர்கள் ரொம்பவே நொந்துபோயிருக்கிறார்கள். இதுதான் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இதன் ரிலீஸை திருவிழா போல் கொண்டாடுவதற்கு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறார்கள்.
அடுத்த வருடம் ரிலீஸ்: மும்முரமாக நடந்து வந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறாராம் வினோத். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துக்கொண்டிருக்கிறார். அனைத்து வேலைகளையும் முடித்து அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.

இசை வெளியீட்டு விழா: அரசியல் கட்சி ஆரம்பித்து ஆளுங்கட்சியை விடாமல் அட்டாக் செய்துவருகிறார் விஜய். எனவே ஜனநாயகன் படத்துக்கு அந்தத் தரப்பு கண்டிப்பாக அழுத்தங்களை கொடுக்க வாய்ப்புகள் அதிகம் என்று அவரது ரசிகர்கள் மட்டும் படக்குழுவின் எண்ணமாக இருக்கிறது. எனவே எந்த பிரச்னையும் இல்லாமல் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தவிருக்கிறார்கள். வரும் 27ஆம் தேதி தளபதி கச்சேரி என்ற பெயரில் அது நடக்கவிருக்கிறது.
பட்டையை கிளப்பும் வியாபாரம்: ஜனநாயகன் படத்தின் வியாபாரத்தை பொறுத்தவரை திருப்திகரமாகவே இதுவரை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 121 கோடி ரூபாயை கொடுத்து வாங்கியிருப்பதாகவும்; போட்டிக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் வந்ததால் உரிம தொகை விண்ணளவு சென்றதாகவும் திரைத்துறையில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சேட்டிலைட் உரிமம்: இந்நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள்படி பார்த்தால்; ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிம வியாபாரமே கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











