Jana Nayagan 2nd Single: விஜய் ரசிகர்களின் தேசிய கீதமா இது.. மிரட்டி விட்டுட்டாங்களே.. புல்லரிக்கும் வரிகள்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படமான ஜன நாயகன் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு இன்று அதாவது டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. இப்படி இருக்கும்போது, இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பாடல் பெரும்பான்மையான ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அடி பாடலாக இருப்பதால் ரசிகர்கள் வைஃப் செய்து வருகிறார்கள்.

ஜன நாயகன் படம் விஜயின் கடைசி படம். படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை என்பது, தெலுங்கில் பாலய்யா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் கதை தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் குறிப்பிடவில்லை.

Vijay Jana Nayagan Second Single Oru Pere Varalaru Song Released Which Receives Good Response From Fans

படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் அரசியல் கலந்த பக்காவான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக அதுவும் தளபதி திருவிழா என்ற பெயரில் படக்குழு நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த பாடலை விஜய் ரசிகர்களின் தேசிய கீதமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். அதேபோல் விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் என இருவரும் பாடலைப் பாடி உள்ளார்கள். பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X